ஜேர்மனியிலும் traditional உடையில் அசத்தும் சூப்பர் சிங்கர் சிவாங்கி! குவியும் லைக்குகள்
சூப்பர் சிங்கர் புகழ் சிவாங்கி தற்போது ஜேர்மனியில் இருக்கும் நிலையில், ட்ரெடிஷனல் உடை அணிந்து ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சிவாங்கி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சிவாங்கி.
இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமாரின் மகள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனாலும் வாய்ப்புகளை செல்வாக்கை பயன்படுத்தி எளிமையாக பெறாமல் திறமையை நிரூபித்து பெற்றவர்களுள் இவரும் ஒருவர்.
பாடகியாக அறிமுகமாகிய சிவாங்கி குழந்தை போல நகைச்சுவையாகவும் வெளிப்படையாகவும் பேசுவதால், அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளியில் கோமாளியாக பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார்.
பின்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையிலும் தனது திறமையை நிரூபித்தார். முதல் படத்திலேயே அசத்தலாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
தற்போது மேடை நிகழ்சிகளில் அதிகம் பங்கேற்று வரும் சிவாங்கி சமூக வளைத்தளங்களிலும் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றார். அண்மையில் தனது சொந்த உழைப்பில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பெறுமதியான புதிய மெர்சிடிஸ் பென்ஸ் GLE கார் ஒன்றையும் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் Traditional in Germany என குறிப்பிட்டு, அழகிய உடையில் செம கியூட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |