இதுவரை இல்லாத ஐடியாவில் வெளியான ப்ரோமோ.. சூப்பர் சிங்கர் எப்போது துவக்கம் தெரியுமா?
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இதுவரையில் இல்லாத வகையில், புதுமையான கருவுடன் ஆரம்பமாகவுள்ளது.
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சூப்பர் சிங்கர்.
இந்த நிகழ்ச்சி கடந்த 10 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு, தற்போது பக்தி சூப்பர் சிங்கர் என புதிய பாணியில் சென்றுக் கொண்டிருக்கிறது.
மற்ற நிகழ்ச்சியை விட இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு புதிய ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள்.
அதிரடியாக வெளியான ப்ரோமோ
இந்த நிலையில், சூப்பர் சிங்கரில் 11வது சீசன் இன்னும் விரைவில் தொடங்கவுள்ளது. 20 போட்டியாளர்களுடன் தொடங்கப்போகும் இந்த புதிய சீசனில் அனுராதா ஸ்ரீராம், உன்னி கிருஷ்ணன், பென்னி தயால் ஆகியோர் நடுவர்களாக தீர்மானிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது சூப்பர் சிங்கர் 11வது சீசனின் புதிய புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. ஒவ்வொரு சீசனிற்கும் வித்தியாசம் காட்டும் சூப்பர் சிங்கர் குழுவினர் இந்த முறை புத்தம் புதிய கருவுடன் ஆரம்பித்துள்ளனர்.
இந்த புது சீசனில் தென் தமிழ், டெல்டா தமிழ், சென்னை தமிழ், எங்கும் தமிழ் என்ற புதிய கரு வைக்கப்பட்டுள்ளன.
இந்த ப்ரோமோ பார்த்த ரசிகர்கள் எபிசோட்டை பார்க்க ஆர்வமாக இருப்பதாக கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |