கண்கலங்கிய ஷாம் விஷாலின் ஆசை நிறைவேறியது! அவருக்கு இவ்வளவு அழகிய தங்கையா? ஹீரோயின் போல இருக்காங்க
சூப்பர் சிங்கர் சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொண்ட ஷாம் விஷால், முதன்முறையாக குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
சூப்பர் சிங்கர் 6 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ஷாம் விஷால், அந்த சீசனுக்குப் பிறகு இன்னும் பிஸியாகிவிட்டார்.
வெள்ளித்திரையிலும் கால்பதித்து அசத்தினார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் தெலுங்கிலும் டப் செய்து வெளியிடப்பட்டது.
தமிழில் இடம்பெற்ற குட்டி ஸ்டோரி பாடலை, தெலுங்கில் பாடியவர் ஷாம் விஷால். இதன் பின்னர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முரட்டு சிங்கிள் உள்ளிட்ட ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார்.
இதில் இறுதிப் போட்டி வரை ஷாம் விஷால் முன்னேறினாலும் வெற்றி பெறவில்லை. ஆனால், அவருடைய பர்ஃபாமென்சை பலரும் பாராட்டினர். பாட்டுப் பாடியே பெண்களின் மனதை கொள்ளை கொண்டார்.
அண்மையில் யூ டியூப் சேனலுக்கு பேட்டியளிக்கும்போது, தன் குடும்பத்தை 6 மாதங்களுக்கும் மேலாக பார்க்கவில்லை என கண்கலங்கியவாறு கூறினார்.
விரைவில் அவர்களை சந்திக்க வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்திருந்தார். அப்போது, ஷாம் விஷாலுடன் பங்கேற்றிருந்த சூப்பர் சிங்கர் நண்பர்கள் அவரை தேற்றினர்.
இந்நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு சொந்த வீட்டிற்கு சென்ற ஷாம் விஷால், குடும்பத்தினரைப் பார்த்து நெகிழ்ச்சியடைந்துள்ளார்.
அப்பா, அம்மா, தங்கை என அனைவருடனும் மகிழ்ச்சியாக அமர்ந்து, புகைப்படம் எடுத்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சிரித்த முகத்துடன் புகைப்படத்தில் இருக்கும் ஷாம் விஷாலையும், குடும்பத்தினரையும் பார்த்து நெட்டிசன்கள் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.
இதேபோல் இன்னும் பல மகிழ்ச்சியான தருணங்கள் ஷாம் விஷாலுக்கு அமைய வேண்டும் என வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.