காதலனை கரம் பிடித்த சூப்பர் சிங்கர் புகழ் ப்ரியா ஜெர்சன்... குவியும் வாழ்த்துக்கள்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல சீசன்களை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது 10-வது சீசன் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பலர் சினிமாவில் பாடும் வாய்ப்பையும் பெற்றுள்ளனர்.
முன்னணி இசையமைப்பாளர்களான ஏ.ஆர். ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, இமான் ஆகியோர் இசையிலும் சூப்பர் சிங்கர் பிரபலங்கள் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரியா ஜெர்சன்
கடந்த 2002ம் ஆண்டு சூப்பர் சிங்கர் சீனியருக்கான 9வது சீசனில் கலந்துகொண்டு பிரபலம் ஆனவர் தான் ப்ரியா ஜெர்சன்.
இந்த சீசனின் நடுவர்களாக ஸ்வேதா மோகன், பென்னி தயால், அனுராதா ஸ்ரீராம் மற்றும் உன்னி கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
9வது சீசனின் முதல் ரன்னர் அப் பட்டத்தை வென்றதுடன் 10 லட்சம் பணத்தையும் பெற்றுக்கொண்டார். இந்த நிலையில் தற்போது பிரியா ஜெர்சன் தனது நீண்ட நாள் காதலன் சார்லி ஜாய் என்பவரை திருமணம் செய்துள்ளார்.
கோலாகலமாக நடைபெற்ற இவர்களின் திருமண காணொளி தனது சமூக வளைத்தள பக்கத்தில் பிரியா ஜெர்சன் வெளியிட்டுள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பரவி வருவதுடன் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |