Super Singer மேடையில் நெப்போலியனுக்கு சிறுமி கூறிய செய்தி- கண்கலங்கிய அரங்கம்
Super Singer மேடையில் சிறுமி ரேணுகா கூறிய வாழ்த்துச் செய்தி அரங்கத்தில் உள்ளவர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
சூப்பர் சிங்கர் ஜூனியர் - 10
பிரபல தொலைக்காட்சியில் பிரமாண்டமாக சூப்பர் சிங்கர் ஜூனியர் - 10 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றது.
இதில் திறமைக் கொண்ட சிறுவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார். இவர்களுக்கான குரல் தேடல் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
இந்த நிலையில், சூப்பர் சிங்கர் ஜூனியர் - 10 போட்டிகள் வாரம் வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பி.ப 6.30 மணியளவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்.
இந்த சீசன் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் நடுவர்களாக டி. இமான், சித்திரம்மா, மனோ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நெப்போலியனுக்கு கூறிய அந்த செய்தி
இந்த நிலையில், நடக்க முடியாமல் இருந்த சிறுமி ரேணுகா பாடுவதில் இருந்த ஈடுபாடு காரணமாக முயற்சி செய்து சூப்பர் சிங்கர் மேடைக்கு வந்துள்ளார்.
அந்த சமயம், அவர் கடந்து வந்த பாதை மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இன்னும் அனுபவிக்கும் கஷ்டங்கள் என்பவற்றை அழகாக அவரே கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து நடிகர் நெப்போலியன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், அவர் தன்னுடன் இருந்து ஊக்கம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். சிகிச்சை முடிந்து வரும் பொழுது நெப்போலியன் அங்கு இல்லையாம். இதனால் சூப்பர் சிங்கர் மேடையில் நெப்போலியன் குடும்பத்தினருக்கும் அவரின் மகனுக்கும் வாழ்த்துக் கூறியுள்ளார்.
இப்படியாக இன்றைய தினம் சூப்பர் சிங்கர் ஜூனியர்-10 ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |