அனிதா சம்பத்திடம் தவறாக பேசிய நபருக்கு நேர்ந்த கதி.. புகைப்படத்துடன் வெளியான ஆதாரம்
அனிதா சம்பத்திடம் தவறாக பேசிய நபருக்கு அவர் செய்த காரியம் இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
அனிதா சம்பத்
பிரபல தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராகவும், ஒரு நடிகையாகவும், பிக் பாஸ் பிரபலமாகவும், டான்ஸ் டைட்டில் வின்னராகவும், விளம்பர மாடலாகவும் பலரின் கவனத்தை ஈர்த்தவர் தான் அனிதா சம்பத்.
அனிதாவின் தந்தையார் வார இதழ் ஒன்றில் பத்திரிக்கையாளராக பணியாற்றியுள்ளார். இவரின் தந்தையார் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளாராம்.
இந்த கதையை பிக் பாஸ் சீசன் 4 கலந்துக் கொண்ட போது அனிதா சம்பத் கூறியிருந்தார். இதனையடுத்து அனிதா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சில நாட்களில் அவருடைய தந்தை மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார்.
மேலும் தன்னுடைய தந்தை மறைவிற்கு பின்னர் இப்போது தான் முதல் பிறந்த நாளை கொண்டாடுகிறாராம் அனிதா.
தவறாக நடந்து கொண்ட நபருக்கு கிடைத்த பதிலடி
இந்த நிலையில், தற்போது சமூக வலைத்தளங்களில் எப்போது ஆக்டிவ்வாக இருக்கும் அனிதா அவரின் டிக் டாக் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் என்பவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில், அனிதா சம்பத்துக்கு இன்ஸ்டாகிராமில் நபர் ஒருவர் தகாத வீடியோக்கள் மற்றும் செய்திகளை அனுப்பிய நபரின் கணக்கை screenshot செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
இதனை தொடர்ந்து குறித்த நபர் மீது நெட்டிசன்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |