Super Singer Junior 10: டைட்டில் வின்னர் இவர் தான்.. பரிசு மொத்தம் இந்தனை லட்சமா?
சூப்பர் சிங்கர் ஜுனியர் 10 நிகழ்ச்சியில் 5 போட்டியாளர்கள் இறுதி சுற்றுக்கு தகுதியான நிலையில், தற்போது வெற்றியாளராக காயத்ரி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சூப்பர் சிங்கர் ஜுனியர் 10
பிரபல தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். தற்போது சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியில் பல குழந்தைகள், திறமைகளை வெளிக்காட்டி பிரமிப்பில் ஆழ்த்தினர்.
பரபரப்பாக நடந்து வந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சியின் பைனல் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதில் கெஸ்ட் ஆக கமல், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். வெற்றியாளர் யார் என்பதை கமல் தான் பிக் பாஸ் பாணியில் கையை பிடித்து அறிவித்தார்.
காயத்ரி டைட்டில் வின்னர் என அறிவிக்கப்பட்டதுடன், பட்டத்தோடு 60 லட்சம் ரூபாய் மதிப்பு உள்ள ஒரு வீடு பரிசாக வழங்கப்பட்டது.
இரண்டாவது இடத்தை நஸ்ரின் பிடித்துள்ளார். நஸ்ரீன் மேடையில் கண்ணீர் விட்டு கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மூன்றாம் இடத்தை இரண்டு பேர் பிடித்து இருக்கின்றனர். முதல் அறிவிப்பாக ஏ.ஆர்.ரஹ்மான் தான் இதை அறிவித்தார். அவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் பணம் பரிசாக வழங்கப்பட்டது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |