Super Singer மேடையில் சாதனை செய்த சிறுமி.. குடும்பத்திற்கான தியாகம்- குவியும் ஆதரவு
Super Singer மேடையில் வாங்கிய பரிசை தனது சகோதரிக்கு கொடுத்த சாராவின் செயல் ரசிகர்களின் கவனத்திற்கு வந்துள்ளது.
Super Singer நிகழ்ச்சி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர்களாக வலம் வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் சூப்பர் சிங்கர் சீனியர் மற்றும் ஜூனியர் என்று நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதன்படி, சமீபத்தில் தான் சீனியர்களுக்கான நிகழ்ச்சி முடிவடைந்தது. தொடர்ந்து தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் ஆறு வயது முதல் 15 வயதிற்கு உட்பட்ட பல குழந்தைகள் கலந்து கொண்டு தங்களின் திறமையால் நடுவர்களிடம் பரிசுகளை வாங்கி குவித்து கொண்டிருக்கிறார்கள்.
அக்காவுக்கு சாரா கொடுத்த பரிசு
இந்த நிலையில், இந்த சீசனில் திறமையான குழந்தைகள் பலர் கலந்துக் கொண்டுள்ளனர். இந்த வாரம் பள்ளிக் கூடம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கூடங்களில் பாடப்படும் மற்றும் போடப்படும் பாடல்களை டாஸ்க்காக வைத்து குழந்தைகள் தங்களின் திறமைகளை காட்டி வருகிறார்கள்.
அதில், சிறப்பாக பாடிய சாரா அழகாக பாடி “ Golden performance” வாங்கியுள்ளார். இதற்காக அவருக்கு பரிசு பொருட்களை வைக்கப்பட்டிருந்தன. அந்த பொருட்களில் ஏதாவது ஒரு பொருளை எடுக்க வேண்டும் என கூறிய போது அவர், Smart Phone-ஐ எடுத்து கொண்டு வருகிறார்.
இது குறித்து தொகுப்பாளர் பிரியங்கா கேட்ட போது, “ என்னுடைய அக்கா கல்லூரிக்கு செல்லும் போது அவருக்கு Smart Phone கேட்டிருந்தார்கள். அவருக்காக தான் இதை எடுத்தேன்..” எனக் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் ஒட்டுமொத்த அரங்கையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |