Super singer மேடையில் பக்தி பாடல்கள்- வெற்றி யாருக்கு?
Super singer மேடையில் பக்தி பாடல்களால் நடுவர்கள் மெய்சிலிர்த்து போயுள்ளனர்.
Super Singer நிகழ்ச்சி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர்களாக வலம் வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் சூப்பர் சிங்கர் சீனியர் மற்றும் ஜூனியர் என்று நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதன்படி, சமீபத்தில் தான் சீனியர்களுக்கான நிகழ்ச்சி முடிவடைந்தது. தொடர்ந்து தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் ஆறு வயது முதல் 15 வயதிற்கு உட்பட்ட பல குழந்தைகள் கலந்து கொண்டு தங்களின் திறமையால் நடுவர்களிடம் பரிசுகளை வாங்கி குவித்து கொண்டிருக்கிறார்கள்.
பாடி அசற வைக்கும் சிறுவர்கள்
இந்த நிலையில், இந்த சீசனில் திறமையான குழந்தைகள் பலர் கலந்துக் கொண்டுள்ளனர்.
அந்த வகையில், இந்த வாரம் பக்தி திருவிழா டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பக்தி நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவர்கள் தன்னாள் முடிந்தவரை பாடல்களை பாடி வருகிறார்கள்.
யாருக்கு என்ன புள்ளிகள் வழங்குவது என தெரியாமல் நடுவர்களும், சிறப்பு விருந்தினர்களும் குழம்பி போயுள்ளனர். அவர்களின் பாடல்கள், நடனம் மற்றும் வழிபாடுகள் அரங்கத்தையே கோயிலாக மாற்றியுள்ளது.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோக்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |