Super Singer Junior: பார்வையற்ற சிறுவனுக்கு இசையமைப்பாளர் கொடுத்த சர்ப்ரைஸ்... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் அரங்கம்
பிரபல ரிவியில் சூப்பர் சிங்கர் ஜுனியர் 11வது சீசன் நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
சூப்பர் சிங்கர் 11
பிரபல ரிவியில் நடைபெறும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு சூப்பர் சிங்கர் சீசன் 11 முடிவடைந்த நிலையில், தற்போது ஜுனியர் சீசன் 11 ஆரம்பமாகி உள்ளது.

சிறு குழந்தைகள் தங்களது திறமைகளை வெளிக்காட்டி அசத்தும் நிலையில், கேரளாவைச் சேர்ந்த ஆர்யன், டார்ஜிலிங்கை சேர்ந்த சவுராபி மற்றும் பார்வை குறைபாடு உள்ள சிறுவன் சர்வேஷ் இவர்கள் பாடும் பாடல்கள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றது.
தற்போது சர்வேஷ் பாடிய பாடலும் அரங்கத்தையே பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. கடந்த வாரத்தில் சர்வேஷின் குரலுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் இமான் கீ போர்டு பரிசாக அளிப்பதாக உறுதியளித்திருந்தார்.
அதே போன்று இந்த வாரம் சர்வேஷ் கேட்ட பரிசை அவருக்கு சர்ப்ரைஸாக கொடுத்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |