சூப்பர் சிங்கரில் வெளியேறிய 2 போட்டியாளர்கள்! அரங்கத்தையே கண்கலங்க வைத்த இளைஞர்கள்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலிருந்து இரண்டு போட்டியாளர்கள் சமீபத்தில் வெளியேறியுள்ளனர்.
சூப்பர் சிங்கர் 11
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சூப்பர் சிங்கர் ஆகும். தற்போது 11வது சீசன் சென்று கொண்டிருக்கும் நிலையில் போட்டியாளர்கள் தங்களது திறமையை வெளிக்காட்டி வருகின்றனர்.
கடந்த வாரம் அம்மாவைக் குறித்து பாடல் பாடி அசத்தியுள்ளனர். பெரும்பாலான போட்டியாளர்கள் அரங்கத்தையே கண்ணீரில் ஆழ்த்தினர்.
இதில் வளர்ப்பு மகனாக இருக்கும் தனது பெற்றோருக்கு அடுத்த பிறப்பில் பிள்ளையாக பிறக்க வேண்டும் என்று ஆபிரகாம் என்ற இளைஞர் கூறியதுடன் அவரது பாடல் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மற்றொரு இளைஞரான விக்னேஷ் தனது தந்தை இல்லாமல் வீட்டின் சுமையை சுமந்து வரும் நிலையில், அவரை வளர்த்த பாட்டி விக்னேஷ் படும் கஷ்டத்தை அரங்கத்தில் உடைத்துள்ளார்.
மேலும் விக்னேஷின் அம்மா பாடலும் அரங்கத்தையே கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. இந்த சீசனில் கடந்த வாரம் வர்ஷா மற்றும் மனோ என இரண்டு போட்டியாளர்கள் குறைவாக வாக்கு பெற்று வெளியேறியுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |