Super Singer: புலம்பெயர்ந்த குடும்பத்தில் சாதித்த பெண்.. மிஸ்கின் செய்த உதவி- கண்ணீருடன் முழ்கிய தருணம்
புலம்பெயர்ந்த குடும்பத்தில் இருந்து சாதிக்கும் நோக்குடன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்ணிற்கு மிஸ்கின் செய்த உதவி முழு அரங்கத்தையும் கண்ணீரில் முழ்க செய்துள்ளது.
சூப்பர் சிங்கர்
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சூப்பர் சிங்கர்.
இந்த நிகழ்ச்சி கடந்த 10 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு, தற்போது பக்தி சூப்பர் சிங்கர் என புதிய பாணியில் சென்றுக் கொண்டிருக்கிறது.
மற்ற நிகழ்ச்சியை விட இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு புதிய ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள். அந்த வகையில், பிரமாண்டமாக ஆரம்பமான சூப்பர் சிங்கர் சீசன் 11 20 போட்டியாளர்களுடன் தொடங்கியது.
இந்த புதிய சீசனில் அனுராதா ஸ்ரீராம், தமன், மிஸ்கின் ஆகியோர் நடுவர்களாக களமிறங்கியுள்ளனர்.
மிஸ்கின் கொடுத்த வாக்கு
இந்த நிலையில், தென் தமிழ், டெல்டா தமிழ், சென்னை தமிழ், எங்கும் தமிழ் என்ற புதிய கருவை வைத்து ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து இந்திய முகாம்களில் வாழும் பெண்ணொருவர் கலந்து கொண்டுள்ளார்.
கடந்த 30 வருடங்களாக முகாம்களில் வாழும் ஏழைக் குடும்பத்தில் பிறந்த பெண், தான் ஒரு மருத்துவராக வர வேண்டும் என்ற ஆசை உள்ளதாக மேடையில் கூறுகிறார். அத்துடன் அவர் 1.5 லட்சம் ரூபாயை கல்லூரி கட்டணமாக செலுத்துகிறார் என்றும் கூறுகிறார்.
இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மிஸ்கின், “ உன்னுடைய படிப்பிற்கு தேவையான முழு செலவையும் இனி நான் செய்கிறேன்..” என ஏகமனதாக ஏற்றுக் கொள்கிறார். இந்த உதவிக்கு குறித்த பெண்ணின் பெற்றோர்கள் கண்ணீருடன் நன்றிக் கூறியுள்ளனர்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |