Super Singer: இதல்லவோ போட்டி.. மேடையை அலங்கரித்த அம்மா-மகள்- எழுந்து நின்று வாழ்த்திய நடுவர்
சூப்பர் சிங்கரில் தாயிற்காக பாட வந்த போட்டியாளரை சிலிர்க்க வைக்கும் குரலில் அவருடைய அம்மா பாடிய தருணம் நடுவர்களை திகைக்க வைத்துள்ளது
சூப்பர் சிங்கர்
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சூப்பர் சிங்கர்.
இந்த நிகழ்ச்சி கடந்த 10 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு, தற்போது பக்தி சூப்பர் சிங்கர் என புதிய பாணியில் சென்றுக் கொண்டிருக்கிறது.

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக?
மற்ற நிகழ்ச்சியை விட இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு புதிய ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள். அந்த வகையில், பிரமாண்டமாக ஆரம்பமான சூப்பர் சிங்கர் சீசன் 11 20 போட்டியாளர்களுடன் தொடங்கியது.
இந்த புதிய சீசனில் அனுராதா ஸ்ரீராம், தமன், மிஸ்கின் ஆகியோர் நடுவர்களாக களமிறங்கியுள்ளனர்.
மகளுக்கு போட்டியாக இறங்கிய அம்மா
இந்த நிலையில், தென் தமிழ், டெல்டா தமிழ், சென்னை தமிழ், எங்கும் தமிழ் என்ற புதிய கருவை வைத்து ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சியில் திறமை வாய்ந்த பல இளைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பாக அவர்களின் திறமைகளை வெளிகாட்டி வருகிறார்கள்.
அன்புள்ள அம்மா டாஸ்க்கில் மகள் பாடிக் கொண்டிருக்கும் பொழுது கண்ணீருடன் அமர்ந்திருந்த அம்மா, மகள் தடுமாறுவது போன்று உணர்ந்ததும் அவர் அடுத்த வரி பாடலை பாடியுள்ளார்.
மகளின் குரலுக்கு இணையாக அம்மா அந்த பாடலை பாடியதை பார்த்த நடுவர்களே எழுந்து நின்று வாழ்த்தியுள்ளனர். கண்ணீருடன் அமர்ந்திருந்த அம்மாவை பார்த்த போட்டியாளருக்கு அழுகையே வந்து விட்டது.
பல போராட்டங்களுக்கு பின்னரான சாதனை எப்படி இருக்கும் என்பதற்கு தொலைக்காட்சி மேடைகள் சிறந்த உதாரணம்.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |