Super Singer Winner: பிரம்மாண்டமாக நடைபெற்ற சூப்பர் சிங்கர் 10 கிராண்ட் ஃபினாலே! வெற்றி பெற்றது யார்?
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் சீசன் 10ல் வெற்றியாளர் யார் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சூப்பர் சிங்கர் சீசன் 10
பிரபல ரிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். தற்போது 10வது சீசன் இன்று முடிவடைந்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் 25 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 11 ஆண் மற்றும் 14 பெண் போட்டியார்கள் மற்றும் நான்கு நடுவர்கள் என இருந்தனர்.
இந்நிகழ்ச்சியினை ம.கா.பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே இருவரும் தொகுத்து வழங்கினர். இந்த ஃபினாலே நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஷன் ரோல்டன் மற்றும் அனுராதா ஸ்ரீராம், மனோ மற்றும் சுஜாதா மோகன் என நான்கு நடுவர்கள் உள்ளனர்.
25 போட்டியாளர்களில் ஜான் ஜெரோம், விக்னேஷ், ஜீவிதா, வைஷ்ணவி, ஸ்ரீநிதி ராமகிருஷ்ணன் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே மதியம் 3 மணிக்குத் தொடங்கி நேரலையில் ஒளிபரப்பாகியுள்ளது.
இதில் ஜான் ஜெரோம் முதலிடத்தை பிடித்து 60 லட்சம் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பினை பெற்றுள்ளார். முதல் ரன்னர் அப் ஆக ஜீவிதா ரூ.10 லட்சத்தினை பரிசாக பெற்றுள்ளார். இரண்டாவது ரன்னர் அப் ஆக வைஷ்ணவியும் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |