Live: விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த சுனிதா வில்லியம்ஸ்- கடலில் விழுந்த காட்சி
விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்று தற்போது 9 மாதங்கள் கழித்து பூமிக்கு திரும்பும் சுனிதா மற்றும் புட்ச் வில்மோரின் காட்சி நேரலையாக ஒளிபரப்பட்டு வருகிறது.
சுனிதா வில்லியம்ஸ்
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் சார்பில் கடந்த ஆண்டு ஜுன் மாதம் 5ம் தேதி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா சர்வதேச விண்வெளி மையத்திற்கு பயணம் மேற்கொண்டார்.
இவருடன் விண்வெளி வீரர் புட்ச் வில்மோரும் சென்ற நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்வெளி மையத்தில் 9 மாதங்கள் தங்க வேண்டிய நிலை வந்து விட்டது.
வெறும் 10 நாட்கள் ஆய்விற்கு சென்ற இவர்கள், அதனை முடித்துவிட்டு பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக அங்கேயே தங்கினர்.
கடந்த ஆண்டு செப்டம் மாதம் 7ம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் ஆட்கள் இன்றி வெறுமையாக பூமிக்கு திரும்பியது.
எத்தனை மணிக்கு?
இந்த நிலையில், விண்வெளிக்குச் சென்ற டிராகன் காப்ஸ்யூல் சர்வதேச விண்வெளி நிலையத்தோடு இணைக்கப்பட்டு இருந்தது. இது அமெரிக்க நேரப்படி திங்கள் மாலை சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிந்து பூமியை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கியது.
அதி வேகத்தில் பயணிக்கும் டிராகன் காப்ஸ்யூல் 21:57 GMTக்கு பூமியில் தரையிறங்கும்.
அதாவது இந்திய நேரப்படி நாளை புதன்கிழமை காலை 3.27க்கு அது பூமி திரும்பும் எனத் தெரிகிறது. இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. நேரலையில் காட்சிகளை எமது தளத்தில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
