மாரடைப்பால் அறுவை சிகிச்சை... தற்போது தெருவில் உறக்கம்! யார் அந்த நடிகர்?
நடிகரும் நகைச்சுவை நடிகருமான சுனில் குரோவர் வீதியில் உறங்கிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் சுனில் குரோவர்
நடிகரும் நகைச்சுவை நடிகருமான சுனில் குரோவர், வியாழக்கிழமை அன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில், ஆற்றங்கரையோரத்தில் நடைபாதையில் நிம்மதியாக உறங்கும் அமைதியான காணொளி ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.
இரவில் ஆற்றங்கரையில் கிழிந்த பாயில் ஓய்வெடுக்கும் காணொளி ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்தக் காணொளியில், பல பக்தர்கள் திறந்த வெளியில் அவருடன் உறங்குவதை காணலாம்.
ரூ.1000 கோடி வசூல் படத்தில் நடித்தவர். ஒரு எபிசோடுக்கு ரூ.25 லட்சம் வாங்கும் நடிகர் இவர் இவர் ஏன் வீதியில் உறக்குகிறார் என பலரும் ஆச்சரியப்பட்டனர்.

நடிகர் சுனில் குரோவர் பகிர்ந்த அ்த காணொளி கங்கை நதிக்கரையில் உள்ள கோயிலில் பக்தர்களுடன் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறார்.
அதுவும் இது இரவு நேரமாக இருந்தது.
கடந்த 2023-ம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ படத்தில் நடித்திருந்தார் சுனில் குரோவர்.
பாலிவுட் திரையுலகில் நடிகராகவும், நகைச்சுவை கலைஞராகவும் பிரபலமானவர்.

கிழிந்த துணியில் திறந்த வெளியில் வீமதியில் படுத்துக்கொண்டிருந்த சுனில் தனது இ்ன்டாவில் பதிவிட்ட காணொளிக்கு ‘தாரே ஜமீன் பர்’ என கேப்ஷனிட்டுள்ளார்.
அதற்கு ‘பூமியில் நட்சத்திரங்கள்’ என பொருள். சில மாதங்களுக்கு முன்பு, சாலையோரத்தில் உள்ள கை பம்பில் துணி துவைக்கும் வீடியோவையும் அவர் பதிவிட்டிருந்தார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சுனில் குரோவரை பாராட்டி வருகின்றனர்.
“உலகில் சிறந்த நடிகர்”, “நீங்கள் ஏன் அதிகம் நேசிக்கப்படுகிறீர்கள் என்பதற்கான காரணம் தான் இந்த வீடியோ”, “எவ்வளவு எளிமையானவர்” என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனுர்.
ஹரியானாவைச் சேர்ந்த சுனில் குரோவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவர்களின் ஆலோசனையின்படி நான்கு பைபாஸ் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.