சந்தீப் கிஷன் பிறந்தநாளுக்கு விஜய் மகன் கொடுத்த சர்ப்ரைஸ்- காணொளிக்கு குவியும் Likes
சந்தீப் கிஷன் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் மகன் ஜெசன் சஞ்சய் இயக்கும் திரைப்படத்தின் புகைப்படங்கள் காணொளியாக வெளியிடப்பட்டுள்ளது.
ஜெசன் சஞ்சய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் நடிகர் விஜய்.
இவர், ஜனநாயகன் திரைப்படத்துடன் சினிமாவில் இருந்து ஓய்வு பெற்று, அரசியலுக்கு செல்லப்போகிறார். இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் துயரத்தில் இருந்து வருகிறார்கள்.
அதே சமயம் ஜனநாயகன் திரைப்படம் எப்படி இருக்கும் என்பதனை காண ஆர்வம் காட்டி வருகிறார்கள். தளபதி விஜய் சினிமாவில் இருந்து வெளியேறும் நிலையில், அவருடைய மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.
கடந்த 2023ம் ஆண்டு இதற்கான அறிவிப்பு வெளிவந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் நாயகனாக சந்தீப் கிஷன் அறிக்கப்பட்டார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்னையில் துவங்கி மூன்று நாட்கள் நடந்தன.
இந்த தகவல் வெளிவந்த நிலையிலும், சஞ்சய் இயக்கத்தில் உருவாகும் படம் ட்ராப் ஆகிவிட்டது என பேச துவங்கிவிட்டனர்.
சந்தீப் கிஷனுக்கு பிறந்தநாள் பரிசு
இந்த நிலையில், சந்தீப் கிஷன் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் மகன் ஜெசன் சஞ்சய் இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்கள் காணொளியாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி, சர்ச்சைகளுக்கு பதிலடிக் கொடுத்துள்ளது.
முதற்கட்ட படப்பிடிப்பு மூன்று நாட்கள் சென்னையில் நடந்தது. இதனை தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கள் இலங்கையில் விரைவில் துவங்கவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
'லைகா நிறுவனத்திடம் இருந்து First Copy அடிப்படையில் ரூ. 25 கோடி இப்படத்திற்கான பட்ஜெட்டை சஞ்சய் வாங்கிவிட்டாராம். இதனால் படப்பிடிப்பிற்கு எந்த ஒரு தடையும் இருக்காது என்றும், படம் கைவிடப்பட்டது என வெளிவந்த தகவல் உண்மையில்லை” என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பேசியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
