Home Tour Part 2: என்னங்க தாலிய கழட்டி வச்சிருக்கீங்க? ஜாலியாக பதிலளித்த கேப்ரியல்லா!
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சுந்தரி சீரியலில் ஹீரோயினாக நடித்து இல்லத்தரசிகளின் மனங்கவர்ந்த நடிகை தான் கேப்ரியல்லா செல்லஸ்.
இந்த தொடர் 2021ம் ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கடந்த 2024ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. டிஆர்பியில் எப்போதும் டாப்பில் இருந்துவந்த இந்த சீரியல் 1144 எபிசோடுகள் வரை ஒளிபரப்பாகி சாதனை படைத்தது.
சாதிப்பதற்கு நிறம் முக்கியமல்ல திறமை தான் முக்கியம் என நிரூபித்து, திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் ஹீரோயின் ஆகலாம் என்பதற்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்தவர்.
ஐரா திரைப்படத்தில் நடிகை நயன்தாரா உடன் முதன்முதலில் நடித்த கேப்ரியல்லா, பின்னர் ரஜினியின் கபாலி, லாரன்ஸின் காஞ்சனா 3 போன்ற படங்களில் சிறிய கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார்.
இவருக்கு திருமணமாகி தற்போது ஒரு குழந்தையும் உள்ள நிலையில், திருச்சியில் பிரம்மாண்ட வீடு வாங்கி செட்டிலாகியுள்ளார். இவரின் Home Tour காணொளியை இங்கு காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |