எளிமையாக நடந்து முடிந்த சுந்தரி சீரியல் நடிகை திருமணம்... குவியும் வாழ்த்துக்கள்
சுந்தரி சீரியல் நடிகை ஸ்ரீகோபிகாவுக்கு தற்போது திருமணம் முடிந்துள்ளது. குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை ஸ்ரீகோபிகா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுந்தரி தொடரில் அணு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
சுந்தரி சீரியல் முடிவுக்கு வந்ததன் பின்னர் பல சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்பினை ஸ்ரீகோபிகா பெற்றார்.
இதனை தொடர்ந்து அன்பே வா சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் மேலும் பிரபல்யம் அடைந்தார். இந்நிலையில் தற்போது ஸ்ரீகோபிகாவுக்கு மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றிருக்கின்றது.
அது காதல் திருமணம் இல்லை, பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணம் என ஸ்ரீகோபிகா கூறி தனது சமூக வளைத்தள பக்கத்தில் திருமண புகைப்படங்களை பகிர்ச்துள்ளார்.
வருண்தேவ் என்பவரை தான் ஸ்ரீகோபிகா கரம் பிடித்து இருக்கிறார். கோவிலில் எளிமையாக நடந்து முடிந்த திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |