18 வயது இளைஞன் போல் மாறிய கூகுள் சுந்தர் பிச்சை! வாயடைத்து போன நெட்டிசன்கள்
ஒட்டு மொத்த சமூக வலைத்தளங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை, நேற்றைய தினம் சிம்பிளான முறையில் தமிழகத்தில் சுற்றிய திரிந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சுந்தர் பிச்சையின் சொந்த ஊர்
தமிழகத்தில் பிறந்த சுந்தர்பிச்சை, கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமாக இருக்கும் ஆல்பாபெட் நிறுவனத்திற்கு சிஇஓவாக திகழ்ந்து வருகிறார்.
இவரின் பள்ளி பருவத்தை தமிழகத்தில் முடித்து விட்டு கரக்பூர் ஐஐடியிலும், அமெரிக்காவிலுள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்திலும் தன்னுடைய மேற்படிப்பை படித்துள்ளார்.
சிம்பிளாக சுற்றி திரிந்த புகைப்படங்கள்
இந்நிலையில் கடந்த டிசம்பர் 26 ஆம் குடும்பத்தினருடன் தன்னுடைய சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்.
இதன்போது பல்லவர் கால கோவில் மற்றும் சிற்பங்களை குடும்பத்தினருடன் பார்த்துக் கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் தன்னை வெளியே காட்டிக்காமல் இவ்வளவு சிம்பிளாக இருக்காரே என்று வியப்படைந்துள்ளனர்.