மனைவியை அடுத்து பாஜகவில் சேர்ந்து போட்டியிடும் சுந்தர் சி.. பரபரப்பில் தேர்தல் களம்!
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடக்கிறது. இதையடுத்து அனைத்து கட்சியினரும் விளம்பரம்படுத்திக்கொண்டு படுபிசியாக இருக்கிறார்கள். மேலும், காங்கிரஸ் கட்சியில் இருந்த குஷ்பு அண்மையில் தான் பாஜகவில் சேர்ந்தார். தமிழகத்தின் அனைத்து தெருக்களிலும் தாமரை மலரும் என்றார்.
தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவரின் கணவும், இயக்குனருமான சுந்தர் சி. தமிழக பாஜக தலைவர் எல். முருகனை இன்று சந்தித்து பேசியிருக்கிறார். இதனால், சுந்தர் சி. பாஜகவில் சேரப்போவதாக பேச்சு கிளம்பியிருக்கிறது. கணவனும், மனைவியும் சேர்ந்து தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறப்படுகிறது.
இருந்தாலும், இது குறித்து சுந்தர் சி. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் வரை எதையும் நம்ப முடியாது. அவர் குஷ்புவுக்காக கூட மரியாதை நிமித்தமாக முருகனை சந்தித்து பேசியிருக்கலாம். தமிழ் திரையுலகை சேர்ந்தவர்கள் பாஜகவில் சேரப் போவதாக தகவல் வெளியாவது இது ஒன்றும் முதல் முறை அல்ல.
முன்னதாக விஷால், எஸ்.ஏ. சந்திரசேகர் ஆகியோர் பாஜகவில் சேரப் போவதாக கூறப்பட்டது. இது குறித்து அறிந்த அவர்களோ இல்லை, இல்லை அது உண்மை இல்லை என்று விளக்கம் அளித்தனர்.