அரண்மனை இயக்குநர் சுந்தர் சி-யின் சொத்து மதிப்பு: குஷ்புவிற்கும் பங்குண்டா?
இயக்குநர் சுந்தரி சியின் சொத்து மதிப்பு தொடர்பிலான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
சுந்தர் சி
இயக்குநர் மணிவண்ணனிடம் உதவியாளராக இருந்து கடந்த 1995ம் ஆண்டு வெளியான “முறை மாமன்” திரைப்படத்தின் மூலம் சுந்தர் சி இயக்குநராக அறிமுகமானார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.
கடந்த 28 வருடங்களாக சினிமாவில் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், நடிகராகவும் திகழ்ந்து வரும் சுந்தர் சி, தன்னுடைய திரைப்படங்களை விரும்பி பார்ப்பதற்காகவே தமிழகத்தில் பலக்கோடி ரசிகர்களை சேர்த்து வைத்திருக்கிறார்.
மினிமம் பட்ஜெட்டில் குறிப்பிட்ட நாட்களுக்குள் படங்கள் இயக்குவதில் சுந்தர் சிகில்லாடியாக பார்க்கப்படுகிறார்.
சினிமாவில் இருந்த காலத்தில் தன்னுடைய முதல் பட நாயகியான குஷ்புவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகிய இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து சுந்தர் சி திருமணத்திற்கு பின்னரும் மனைவியுடன் இணைந்து படங்கள் இயக்கியும் நடித்தும் வருகிறார்.
சொத்து மதிப்பு
இந்த நிலையில் இன்றைய தினம் 56வது பிறந்தநாளை கொண்டாடி வரும் சுந்தரி சியின் சொத்து விவரங்கள் தொடர்பிலான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
அந்த வகையில், சுந்தர் சியிடம் குஷ்புவின் சொத்துக்கள் அல்லாமல் ஒட்டுமொத்தமாக 40 முதல் 50 கோடி ரூபாய் வரை சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகின்றது.
மேலும், திரைப்படங்களில் நடிப்பதற்காக மட்டும் 2 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கிறாராம்.
அதே வேளை சென்னையில் வீடு உட்பட சில இடங்களில் சொத்துகள் வைத்திருக்கிறார்.
அத்துடன் உயர் ரக கார்களான ஆடி, BMW ஆகியவைகளை பயன்படுத்தி வருகிறார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |