சுந்தர் சி-யை ஏமாற்றினாரா மணிவண்ணன்...? வெளியான உண்மை காரணம்... ரசிகர்கள் ஷாக்...!
சுந்தர் சி-யை ஏமாற்றினாரா மணிவண்ணன்...? என்ற கேள்விக்கு உண்மையான காரணம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சுந்தர் சி.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சுந்தர். சி. இவர் ஆரம்ப காலத்தில் மணிவண்ணனிடம் உதவியாளராக இருந்து வந்தார். இதனையடுத்து, ‘முறைமாமன்’ என்ற படத்தின் மூலம் இயக்குநரானார்.
இதன் பிறகு, உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், அன்பே சிவம் உட்பட கிட்டத்தட்ட தமிழில் 29க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். 2006-ம் ஆண்டு ‘தலை நகரம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக சுந்தர் சி. நடித்தார். பிறகு, நடிகை குஷ்பூவை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
சுந்தர் சி-யை ஏமாற்றினாரா மணிவண்ணன்...?
இந்நிலையில், சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி கொடுத்தார்.
அப்போது, அவர் சுந்தர் சி. குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
பேட்டியில், இயக்குனர் சுந்தர் சி, ‘அமைதிப்படை’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். ஆனால், அப்படத்தின் டைட்டில் கார்டில் அவர் பெயரே இல்லை. அப்படியென்றால் அது உண்மை இல்லையா? என்று கேட்க, அப்போது அவர் பேசுகையில்,
நடிகர் சத்யராஜ் நடிப்பில் ‘அமைதிப்படை’ படம் 1994ம் ஆண்டு வெளியானது. இப்படத்தை மணிவண்ணன் இயக்கினார். இப்படத்தில் உதவி இயக்குநராக சுந்தர் சி. பணியாற்றினார். ஆனால், இதற்கு அடுத்த ஆண்டிலேயே சுந்தர் சி இயக்குனராகிவிட்டார். ‘அமைதிப்படை’ படத்தில் சுந்தர் சியால் சிறிது காலம்தான் பணியாற்றினார். அதனால், அவரது பெயர் டைட்டிலில் இடம்பெறவில்லை என்றார்.