வயிற்று பிரச்சினைகளுக்கு உடன் தீர்வளிக்கும் சுண்டைக்காய்
பொதுவாக நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளும் காய்கறிகளில் எம்முடைய வியாதிகளுக்கு மருந்தாகிறது.
கிராமங்களில் கிடைக்கும் சுண்டைக்காய்க்கு வயிற்றில் ஏற்படும் புண்கள், மற்றும் தேவையற்ற கிருமிகள் என்பவற்றை அகற்றி வயிற்றுப்பகுதியை சுத்தம் செய்யக்கூடிய ஆற்றல் உண்டு.
அந்த வகையில் சுண்டைக்காயில் இருக்கும் மருத்துவ குணங்கள் மற்றும் எவ்வாறு இதனை சமைக்கலாம் என்பது குறித்து தெரிந்துக் கொள்வோம்.
சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள்
சுண்டைக்காயை உணவில் சேர்ப்பதால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதை தடுக்கிறது.
மேலும் எமது உடலில் காணப்படும் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப் பெறச் செய்யும் இதனையே ஆன்டி இன்ஃப்ளமேட்டரி குணங்கள் என அழைக்கப்படுகிறது.
சுண்டைக்காயிலுள்ள இரும்புச் சத்து இரத்த சோகையை சரி செய்கிறது.
சிறுவர் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல் வேளைகளில் சுண்டைக்காய் உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம். ஏனெனின் இது வெள்ளை அணுக்களை அதிகரித்து நோயுடன் போராடுவதற்கான சக்தியை அளிக்கிறது.
இதனைதொடர்ந்து வெட்டு காயங்கள், புண்கள் தையமின், ரிபோஃப்ளோவின் , வாய்ப்புண் மற்றும் சொத்தைப் பல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கிறது.
தொடர்ந்து நரம்பு தொகுதிக்கு வலுப்பெற சக்தியை வழங்கி பார்வைத்திறனையும் அறிவாற்றலையும் அதிகரிக்கிறது.
பிரசவத்திற்கு பின்னர் பெண்களுக்கு பத்தியச் சாப்பாடு கொடுப்பார்கள் இதில் முக்கிய இடத்தை பிடிக்கும் 'அங்காயப் பொடி', சுண்டைக்காய் வைத்து தயாரிக்கப்படுபவையாகும். ஏனெனின் இது தாய்ப்பால் சுரப்பியை அதிகரிக்க செய்கிறது.
பொதுவாக எமது வயிற்று பகுதியில் புழுக்கள் காணப்படும். இதனை வளரவிடாமல் கட்டுபடுத்துவதற்கு சுண்டைக்காயுடன் தொடர்புப்பட்ட உணவு வகைகளை வழங்க வேண்டும். இது அவற்றை வெளியேற்றி வயிற்றை சுத்தபடுத்துகிறது.