8 மாதங்களுக்கு கஷ்டமில்லை - உருவாகும் சுனாபா யோகம்... யாருக்கு ஜாக்பட்?
ஜோதிடத்தில் வாழ்க்கையின் திசையை மாற்றக்கூடிய சுனாபா யோகம் என்று ஒரு யோகம் உள்ளது. மே 2026 முதல் சுமார் 8 மாதங்களுக்கு செயல்படத் தொடங்கும். இதனால் 3 ராசிக்காரர்கள் பொருளாதார முன்னேற்றம், பதவி உயர்வு, மற்றும் குடும்ப மகிழ்ச்சி போன்றவற்றை பெறுவார்கள்.

சுனாபா யோகம்
ஜோதிடத்தில் வாழ்க்கையின் திசையை மாற்றக்கூடிய பல யோகங்கள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமான யோம் தான் சுனாபா யோகம்.
ஜோதிடத்தின்படி சந்திரனுக்கு அடுத்த வீட்டில் கிரகங்கள் அமைந்தால் இந்த யோகம் உண்டாகும் என கூறப்படுகின்றது.

இந்த யோகத்தால் குறிப்பிட்ட ராசிகளின் மனவலிமையை அதிகரித்து, பொருளாதார முன்னேற்றம், சமூக மரியாதை, பதவி உயர்வு போன்ற பல நன்மைகளை வழங்கும்.
இந்த ஆண்டு, மே 2026 முதல் இந்த சுனாபா யோகம் செயல்படத் தொடங்கி, சுமார் 6 முதல் 8 மாதங்கள் வரை அதன் தாக்கம் நீடிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த காலகட்டத்தில் குறிப்பிட்ட சில ராசிகள் தங்கள் வாழ்க்கையில் ராஜா போல வாழ்வார்கள். அந்த ராசிகள் பற்றியும் அவர்களுககு என்ன நன்மை என்பது பற்றியும் பார்க்கலாம்.

மிதுனம்
- மிதுன ராசிக்காரர்கள் இயல்பாகவே புத்திசாலித்தனமும், நல்ல தொடர்புத்திறனும் கொண்டவர்கள். சுனாபா யோகம் இந்த குணங்களை அதிகரிக்கும். வேலை இருப்பவர்களுக்கு கட்டாயம் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். புதிய வேலை தேடினால் நல்ல வேலை கண்டிப்பாக கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தகவல் தொடர்பு, மீடியா, மார்க்கெட்டிங் துறைகளில் உள்ளவர்களுக்கு நன்மை அள்ளி கொடுக்கும் காலம் இது. வருமானம் அதிகரிக்கும்.
கடகம்
- கடக ராசிக்காரர்களுக்கு இந்த சுனாபா யோகம் உறுதியான முன்னேற்றத்தை வழங்கும். குடும்பம் மற்றும் தொழில் இரண்டிலும் சமநிலை உருவாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். நிலம், வீடு, வாகனம் போன்ற சொத்து வாங்குவீர்கள். நீண்ட காலமாக நினைத்த ஆசைகள் நிறைவேறும். வேலைவாய்ப்பில் இருப்பவர்களுக்கு பெரிய பொறுப்புகள் கிடைக்கும். அந்தஸ்து மரியாதை அதிகரிக்கும்.
விருட்ச்சிகம்
- விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த சுனாபா யோகம் ஒரு பெரிய திருப்புமுனையாக அமையும். வாழ்வின் முன்றேற்றத்திற்கு இருந்த தடைகள் விலகி புதிய பாதை பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் திடீர் வளர்ச்சி கிடைக்கும். முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். மறைந்திருந்த திறமைகள் வெளிப்பட்டு, புதிய வாய்ப்புகளை உருவாக்கும். அதிகாரப்பூர்வ பதவிகள், முக்கிய பொறுப்புகள் உங்களை தேடி வரும். சமூகத்தில் உயர்ந்த மரியாதை கிடைக்கும். பணவரவு எதிர்பாராமல் வரும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).