பெண் ஆசையில் வசமாக சிக்கிய கதிர்.. அப்பத்தாவை மிரட்டி பார்க்கும் குணசேகரன்- நடக்க போவது என்ன?
பெண் ஆசையில் பின்னால் சென்று ஜீவானந்தம் ஆக்களிடம் கதிர் வசமாக சிக்கியுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல்.
இந்த சீரியல் ஆரம்ப காலங்களில் சுமாராக சென்றாலும் குணசேகரின் ஆதிக்கத்தை அதிகமாக வைத்து நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு வளர்ந்து வந்தது.
பெண்களை அடிமையாக வைத்திருக்கும் ஆண்கள் பெண்களுக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்பதனை இந்த சீரியல் சமூகத்திற்கு கூறி வருகின்றது.
அத்துடன் சொத்துக்காக மனிதர்கள் எப்படியெல்லாம் மாறுவார்கள் என்பதனை இந்த சீரியலில் கண்கூடாக பார்க்கலாம்.
மாரிமுத்துவின் இறப்பிற்கு பின்னர் சரிந்து விடும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் எதிர்பாராத திருப்பங்களை கொடுத்து இயக்குநர் மீண்டெழ வைத்துள்ளார்.
வசமாக சிக்கிய கதிர்
இந்த நிலையில்,அப்பத்தாவின் சொத்து யாருக்கு செல்ல போகிறது என பார்ப்பதற்காகவும் திருவிழாவிற்காகவும் அனைவரும் கிராமத்திற்கு வந்துள்ளார்கள்.
கிராமத்தில் வைத்து ஜீவானந்தம், அப்பத்தா இருவரின் கதையை முடித்து சொத்தை கைப்பற்ற வேண்டும் என்ற திட்டத்தில் குணசேகரன், கரிகாலன் மற்றும் கதிர் ஆகிய மூவரும் வந்துள்ளார்கள். குழந்தைகளை பார்த்து கொள்ளும் பொறுப்பில் ஞானம் வீட்டில் தங்கி விட்டார்.
இப்படியொரு நிலையில் பெண் ஆசையில் ஒரு பெண் பின்னால் சென்று கதிர் ஜீவானந்தம் ஆக்களிடம் வசமாக சிக்கிக் கொள்கிறார்.
குணசேகரனையும் கொன்று விடுவேன்.. என ஜீவானந்தம்- ஈஸ்வரிடம் முன்னரே கூறி விட்டார். இது தெரியாமல் முன்னாள் காதலன் என ஜீவானந்தத்தை குத்திக் காட்டி திட்டிக் கொண்டிருக்கிறார் குணசேகரன்.
கதை எப்படி செல்லும் என எதிர்பார்த்து கொண்டு எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |