சீரியல் நடிகைகளுக்கு ஒருநாள் சம்பளம் இவ்வளவு தானா?
சினிமாவை விட குடும்பப் பெண்கள் சீரியல்களைத் தான் அதிகம் விருப்பிப் பார்ப்பார்கள். அதிலும் சில சீரியல்களுக்கும் அதில் நடிப்பவர்களுக்கும் ஒரு சிலர் தீவிர ரசிகர்களாய் இருப்பார்கள் அப்படி நீங்கள் விரும்பி பார்க்கும் சன்டிவி சீரியல் நடிகைகளுக்கு கிடைக்கும் சம்பளம் பற்றி தெரியுமா?
சன் சீரியல்
சன் டிவியில் காலையில் இருந்து இரவு வரைக்கும் சில சீரியல்கள் ஓடிக்கொண்டிருக்கிறது.
பாண்டவர் இல்லம், மீனா, அருவி, ஆனந்தராகம், புது வசந்தம், கயல், சுந்தரி, எதிர்நீச்சல், வானத்தைப்போல, இனியா, மிஸ்டர் மனைவி இதில் என அடுத்தத்து ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்களாகும்.
இந்த சீரியல்களில் சினிமாவைப் போல ஹீரோ, ஹீரோயின், வில்லன், நகைச்சுவை நடிகர் என பலரும் நடித்திருப்பார்கள். அதில் ஹிரோயின்களாக நடிக்கும் நடிகைகளின் சம்பள விபரங்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
சீரியல் நடிகைகளின் சம்பள விபரம்
இதில் கயல் சீரியலில் நடிக்கும் நடிகை சைத்ரா ரெட்டி, இந்த சீரியலுக்கு முன்னர் யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமானவர் இவர் இந்த சீரியலில் நாள் ஒன்றுக்கு இவர் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.
சினிமா, சீரியல் என கலக்கும் சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் ரூபாய் தான் சம்பளம் வாங்குகிறார்.
ராஜா ராணி சீரியல் மூலம் பல ரசிகர்களை உருவாக்கிக் கொண்ட ஆல்யா மானசா தற்போது இனியா சீரியலில் நடித்து வருகிறார். இவர் அந்த சீரியலுக்காக நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார்.
மக்கள் மத்தியில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல் சீரியல் இந்த சீரியலில் ஜனனியாக நடித்து வரும் மதுமிதா நாள் ஒன்றுக்கு 15ஆயிரம் ரூபா தான் சம்பளம் வாங்குகிறார்.
மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பாண்டவர் இல்லம் சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் பாப்ரி கோஸ் ஒரு நாள் சம்பளமாக 10 ஆயிரம் ரூபா தான் வாங்குகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |