கிளைமேக்ஸிற்கு செல்லும் பிரபல சீரியல்.. முடிவு எப்போது தெரியுமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்
எதிர்நீச்சல் சீரியல் முடிவிற்கு வரப்போவதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல்
கோலங்கள் சீரியலை தொடர்ந்து மெகா ஹிட் கொடுத்த சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலை பிரபல இயக்குநர் திருச்செல்வம் இயக்கி வந்தார்.
கடந்த 2022ம் ஆண்டு பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த தொடர் 700 எபிசோடுகளை தாண்டி தற்போது விறுவிறுப்பக ஒளிபரப்பாகி வருகிறது.
கதைப்படி ஆணாதிக்கம் கொண்ட வீட்டில் அவர்களை மீறி பெண்கள் எப்படி வெளியே வருகிறார்கள் என காட்டப்படுகின்றது.
குணசேகரன் பிடியிலிருந்து வந்த கதிர், ஞானம், சக்தி மூவரும் சொந்தகாலில் நிற்கிறார்கள். அவர்களின் மனைவிமாரும் தனக்கென ஒரு தொழிலை தேடிக் கொள்கிறார்கள்.
முடிவிற்கு வரும் சீரியல்
சீரியல் இப்படி பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் நிலையில் நிறைவிற்கு வரப்போவதாக சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வெளியாகியிருக்கிறது.
எதிர்வரும் ஜுன் மாதம் இந்த தொடரின் கிளைமேக்ஸ் காட்சிகள் ஒளிபரப்படும் என கூறப்படுகின்றது.
ஆனால் இந்த செய்தி எந்தளவு உண்மை என தெரியவில்லை. “முடிவுக்கு வருகிறது” என்ற செய்தி கேள்விப்பட்ட நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |