விசாக நட்சத்தில் சூரியபெயர்ச்சி: ராஜயோகத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசியினர்!
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றமானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.
குறிப்பாக கிரகங்களின் அதிபதியாக திகழும் சூரிய பெயர்ச்சிக்கு இந்து மதத்திலும் சரி சாஸ்திரங்களிலும் சரி மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

அந்த வகையில் நவம்பர் 6ஆம் திகதி வியாழக்கிழமை விசாக நட்சத்திரத்திற்குள் சூரிய பகவான் நுழைகிறார்.
விசாக நட்சத்திரத்தின் அதிபதியாக தேவர்களின் குருவான வியாழன் இருப்பதால் இந்த பெயர்ச்சி 12 ராசிகளிலும் குறிப்பிடதக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

சூரிய பகவான் குருவின் நட்சத்திரத்தில் நுழைவது அனைத்து ராசிகளிலும் ஒரு சில சாதக பாதக மாற்றங்களை ஏற்படுத்தினாலும், ராஜ யோகத்தை பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்

சூரியனின் இந்த நட்சத்திர பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு பல்வேறு வகையிலும் சாதக பலன்களை கொடுக்கப்போகின்றது.
இவர்களுக்கு புத்தாண்டுக்கு முன்னர் தொழிலில் எதிர்பாராதளவு உயர்வு கிடைக்கப்போகின்றது. ஒரு தொழிலைத் புதிய தொடங்க விரும்பினால், இந்த காலகட்டம் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களிடமிருந்து முழு ஆதரவு கிடைக்கும்.இதுவரை காலமும் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு ஒரு சுமூகமான தீர்வு கிடைக்கும்.
சிம்மம்

சூரியனின் ஆதிக்கத்தில் பிறப்பெடுத்த சிம்ம ராசியினருக்கு இந்த சூரிய பெயர்ச்சி எதிர்பாராக செல்வத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கப்போகின்றது.
இந்த ராசியில் பிறந்தவர்கள் அனைத்து விதமான நன்மைகளையும் அனுபவிக்கப்போகின்றார்கள். குறிப்பாக தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
பொருளாதார நிலைமை வலுவாக இருக்கும். குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்பத்துக்கான சில நல்ல திட்டங்களை முன்னெடுக்க ஆரம்பிப்பார்கள்.
விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சூரியனின் பெயர்ச்சி பல்வேறு வகையிலும் அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப்போகின்றது.
இந்தப் பெயர்ச்சி விருச்சிக ராசியினரின் நீண்டகால ஆசைகளை வெற்றிகமாக நிறைவேற்றும். பணவரவு சிறப்பாக இருக்கும்.
இந்த ராசியில் பிறந்தவர்கள் நீண்ட காலமாக வேலை தேடிக்கொண்டிருந்தால், இந்தக் காலகட்டத்தில் மனதுக்கு பிடித்த உத்தியோகம் அமையும். சொத்துக்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |