நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் பார்க்கப்படுகிறார்.
இவர், இந்த மாதம் முதல் தன்னுடைய ராசியை மாற்றவுள்ளார்.
இந்த இடமாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும்.
ஜோதிட சாஸ்திரத்தின் சுக்கிரன் பெயர்ச்சியால் உருவாகும் ராஜயோகம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மாத்திரம் கிடைக்கவுள்ளது. சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கிறது.
அந்த வகையில், சூரிய பகவான் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கும்ப ராசிக்கு செல்கிறார். இந்த மாற்றத்தினால் ஏற்படும் பலன்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சூரிய பெயர்ச்சி பலன்கள்
![Rasipalan: சொர்க்க வாசலை திறக்கும் சுக்கிரன்- ராஜயோகம் எந்த ராசிக்கு தெரியுமா? | Sun Transiting In Aquarius Lucky Zodiac Signs Rasipalan: சொர்க்க வாசலை திறக்கும் சுக்கிரன்- ராஜயோகம் எந்த ராசிக்கு தெரியுமா? | Sun Transiting In Aquarius Lucky Zodiac Signs](https://cdn.ibcstack.com/article/e2f2f327-7a17-4175-8e4e-4b2b5e8a8175/25-67a52afdc9bca.webp)
மேஷ ராசி
| - தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
-
சில காரியங்களில் சிறு தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
-
சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். எனவே பணம் விடயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
-
வாழ்க்கைத்துணை வழியில் சில சமயங்களில் பிரச்சினைகள் ஏற்படலாம்.
- ஏதாவது பிரச்சினை ஏற்படின் அம்பிகையை வழிபட்டால் நல்ல திருப்பங்கள் கிடைக்கும்.
-
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி ஆதாயம் கிடைக்கும்.
|
ரிஷபம் ராசி
| - காரியங்களில் அனுகூலம் கிடைக்க வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.
-
எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். .
-
சிலருக்கு பல நாட்களாக வராத பணம் வரலாம்.
-
கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரித்து குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
-
மகாலட்சுமி வழிபாடு நன்மைகள் அதிகரிக்கும்.
|
மிதுனம் ராசி
| - மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும்.
-
தொடங்கும் புதிய தொழில் சாதகமான பலன் கிடைக்கும்.
-
நீண்ட நாட்களாக இருந்த நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும்.
-
சிலர் உங்களுக்கு எதிராக சில தொல்லைகள் தரலாம். இந்த காலப்பகுதியில் அது நீங்க வாய்ப்பு உள்ளது.
-
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
|
கடகம் ராசி
| - தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாக முடியும்
-
சிலருக்கு வீட்டில் தெய்வ வழிபாடுகள் அதிகரிக்கலாம்.
-
ரொம்ப நாளாக எதிர்பார்த்த நல்ல தகவல் வீடு வந்து சேரும்.
- வியாபாரத்தில் சக வியாபாரிகள் போட்டியாக வரலாம்.
-
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம்.
|
சிம்மம் ராசி
| - மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்படும்
-
உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.
-
தாயின் தேவைகளை நிறைவேற்றுவதில் கூடுதல் செலவுகள் ஏற்படலாம். இதனால் பணத்தை கொஞ்சம் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
- குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும்.
- சரபேஸ்வரர் வழிபாடு நல்லது.
|
கன்னி ராசி
| - இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.
-
புதிய முயற்சிகள் செய்து வேலை செய்ய வாய்ப்பு வரும்.
-
நீண்ட நாட்களாக காத்திருந்த அனைத்து விடயங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது.
-
சிலருக்கு சகோதரர்களால் தர்மசங்கடமான நிலை ஏற்படும்.
-
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும்.
|
துலாம் ராசி
| - வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும்.
-
நீங்கள் செய்யும் காரியங்களில் துணிச்சலுடன் ஈடுபடுவீர்கள்.
-
வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும்.
-
வியாபாரத்தில் லாபம் அதிகரித்து பணவரவு அதிகமாகும்.
-
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
|
விருச்சிகம் ராசி
| - வியாபாரத்தில் செலவுகள் அதிகரிப்பதால் மனதில் சலனம் ஏற்படக்கூடும்.
-
கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு நீங்கி பழைய வாழ்க்கைக்கு திரும்புவார்கள்.
-
வியாபாரம் எப்போதும் போல் நல்ல வருமானம் கிடைக்கும். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு முருகப் பெருமாளின் அருள் இருக்கும்.
-
பைரவரை வழிபடுவதன் மூலம் சாதகமான பலன்கள் ஏற்படும்.
-
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் தவிர்ப்பது நல்லது.
|
தனுசு ராசி
| - மனதில் இனம் புரியாத புதிய குழப்பங்கள் ஏற்படும்.
பழைய முயற்சிகளை கைவிட்டு புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
-
வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் அதிகரிக்கும்.
-
உங்கள் தலையீடு இல்லாமல் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும்.
-
வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்து செல்ல வேண்டும்.
- தட்சிணாமூர்த்தி வழிபாடு தடைகளும் நீக்கும்.
|
மகரம் ராசி
| - மனதில் உற்சாகமும், செயல்களில் பரபரப்பும் காணப்படும்.
-
சிலருக்கு எதிர்பாராத பணவரவு, ஆடை, ஆபரண சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு.
-
சிலருக்கு எதிர்பார்த்த பணவரவு வீடு வந்து சேரும்.
-
இளைய சகோதரர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கி சந்தோஷமான குடும்ப வாழ்க்கை நடக்கும்.
-
சிவபெருமானை வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
-
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாளாக தடைப்பட்டு வந்த காரியம் சாதகமாக முடியும்.
|
கும்பம் ராசி
| - மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும்..
-
உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும்
-
மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த கடன் தொகை திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
-
வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் தேவை.
- முருகப்பெருமானை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.
-
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.
|
மீனம் ராசி
| - மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும்.
-
உறவினர்கள் மத்தியில் வீண்மனஸ்தாபம் ஏற்படும்.
-
சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் கிடைத்து விடும்.
-
வியாபாரத்தில் சில பல பிரச்சினைகள் ஏற்படும். அதனை நீங்களே சமாளிக்கலாம்.
- தட்சிணாமூர்த்தியை வழிபட தடைகள் நீங்கும்
- பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர்பாராத செலவுகளால் அவஸ்தைப்படுவார்கள்.
|
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).