கன்னி ராசியில் சூரியன் பெயர்ச்சி : இந்த 4 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்!
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன், தன்னம்பிக்கை, கௌரவம், தலைமைப்பண்பு ஆகியவற்றின் காரணியாக விளங்குகிறார்.
மாதம் ஒருமுறை ராசி மாறும் சூரியன், சிம்ம ராசியின் அதிபதியாவார். தற்போது சிம்ம ராசியில் பயணிக்கும் சூரியன், செப்டம்பர் 17ஆம் தேதி கன்னி ராசிக்குள் நுழைந்து, அக்டோபர் 17ஆம் தேதி வரை அங்கு இருப்பார்.

கன்னி ராசியின் அதிபதி புதன் என்பதால், இந்தப் பெயர்ச்சி வேலைகளில் ஒழுக்கம், பகுப்பாய்வு திறன் மற்றும் திட்டங்களை திறம்பட செயல்படுத்தும் மனப்பான்மையை அதிகரிக்கக்கும் என்று ஜோதிட கணிப்புகள் குறிப்பிடுகின்றன.
சூரியனின் இந்தப் பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களையும் பாதித்தாலும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு வாழ்வில் அதிர்ஷ்ட கதவை திறக்கப்போகின்றது. அப்படி அதிர்ஷ்டத்தின் முழு பலனையும் அனுபவிக்கப்போகும் ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கன்னி

கன்னி ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் தன்னம்பிக்கையும், முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும்.பணியிடத்தில் கடின உழைப்புக்குப் பலன் கிடைக்கும்.
அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றி பெறுவீர்கள். தொழிலதிபர்களுக்கு லாபம் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். சிலருக்கு தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பும், சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
மீனம்

மீன ராசியின் 7-வது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் தொழில் ரீதியாக முக்கியமான காலமாக அமையும். புதிய பொறுப்புகள் கிடைக்கலாம்.
வியாபாரிகளுக்கு புதிய நட்புகள் மூலம் லாபம் தரும் ஒப்பந்தங்கள் அமையலாம். உயர் அதிகாரிகளின் உதவியுடன் நீண்டகால பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளியிடம் வெளிப்படையாக இருப்பது நல்லது.
சிம்மம்

சிம்ம ராசியின் 2-வது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, புதிய வழியில் வருமானம் கிடைப்பதற்கான வழிகள் திறக்கும்.
பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்குப் பலன் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவும், நல்ல உறவும் கிடைக்கும். திட்டங்களைச் சரியாக செயல்படுத்தினால் நல்ல பலன்களைப் பெறலாம்.
தனுசு

தனுசு ராசியின் 10-வது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் தொழிலில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் தலைமைப்பண்புகள் பாராட்டப்படும்.
சிலருக்கு பதவி உயர்வு, புதிய பொறுப்புகள் அல்லது சம்பள உயர்வு கிடைக்கலாம். தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் தேடி வரும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிப்பதுடன், நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பணிகளும் வெற்றிகரமாக முடியும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |