தீபாவளியின் பின் விருச்சிகம் செல்லும் சூரியன்: பணமும் பதவியும் பெறப்போகும் டாப் 3 ராசிகள்!
Sun Transit In Scorpio who will get huge luck : ஜோதிடத்தின்படி நவகிரகங்களின் நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களும், ஆற்றல் மிக்க கிஜரகங்களி்ன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகங்களும் 12 ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என்று தொன்று தொட்டு நம்பப்படுகின்றது.
அந்த வகையில் தற்போது துலாம் ராசியில் பயணிக்கும் கிரகங்களின் தலைவனாகக் கருதப்படும் சூரியன் தீபாவளிக்குப் பிறகு நவம்பர் 16ஆம் தேதி செவ்வாய் பகவானின் ஆட்சிக்குட்பட்ட விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார்.

இந்த ராசியில் டிசம்பர் 16ஆம் தேதி வரை பயணிக்கும் சூரியன், பின்னர் தனுசு ராசிக்கு மாறுவார். சூரியனின் இந்தப் பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஏற்படலாம்.
சிலருக்கு சவால்கள் நிறைந்த காலமாக இருந்தாலும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் தொழிலில் சிறப்பான முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் காணப் போகிறார்கள். அப்படி சூரியன் பெயர்ச்சியால் தொழில் மற்றும் நிதி ரீதியில் உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

ரிஷப ராசியின் 7-ஆவது வீட்டிற்கு சூரியன் செல்வதால், இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடும் வாய்ப்பு அமையும்.
பணிபுரிபவர்களுக்கு அதிர்ஷ்டமான காலமாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதுடன், வேலை மாற்றத்தை எதிர்பார்ப்பவர்களுக்கும் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
கூட்டுத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய வருமான வழிகள் உருவாகும் அதேவேளை, செலவுகளும் அதிகரிக்கலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், சிறப்பாகவும் இருக்கும்.
மிதுனம்

மிதுன ராசியின் 6-ஆவது வீட்டிற்கு சூரியன் செல்வது மங்களகரமான பலன்களைத் தரும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிப்பதால், எடுத்துக்கொண்ட வேலைகளைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள்.
போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கும் இது சாதகமான காலமாக அமையும். பணவரவு அதிகரிப்பதால் பொருளாதார நிலையும் மேம்படும்.
மகரம்

மகர ராசியின் 11-ஆவது வீட்டிற்கு சூரியன் செல்வதால், நீண்ட நாள் ஆசைகள் பல நிறைவேறும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
ஏற்கனவே செய்த முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். பரம்பரைச் சொத்துகள் வழியாக எதிர்பாராத பணவரவும் கிடைக்கலாம்.
தொழிலதிபர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வாழ்க்கைத்துணையுடனான உறவும் வலுவடையும். புரிந்துணர்வு அதிகரிக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |