சூரியன் துலாம் ராசியில் சஞ்சாரம்: அக்டோபர் 17 முதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்!
ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாகக் கருதப்படும் சூரியன், தன்னம்பிக்கை, மரியாதை, அதிகாரம், தொழில் மற்றும் ஆளுமைக்கான காரணியாக விளங்குகிறார். இவர் மாதம் ஒருமுறை ராசியை மாற்றி, மனித வாழ்வில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகிறார்.
சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் தற்போது கன்னி ராசியில் பயணித்து வரும் நிலையில், அக்டோபர் 17ஆம் தேதி துலாம் ராசிக்கு செல்லவுள்ளார். அங்கு நவம்பர் 16ஆம் தேதி வரை சுமார் ஒரு மாதம் இருப்பார்.

துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன் என்பதால், இந்தக் காலகட்டத்தில் சூரியனின் பயணம் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் வெவ்வேறு பலன்களை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு இது அதிர்ஷ்டமான காலமாக அமையலாம்.
அதே நேரத்தில், சிலர் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய சூழல் ஏற்படடும். சூரியனின் துலாம் ராசிப் பயணத்தால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சியின் போது, மேஷ ராசியின் 7-ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்களின் வியாபாரத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
மற்றவர்களை நம்பி பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். நீண்ட தூரப் பயணங்களைத் திட்டமிடும்போது கவனமாக இருக்க வேண்டும்.
குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தன்னம்பிக்கை குறையவும் வாய்ப்புள்ளது. எனவே, எந்தவொரு புதிய வேலையையும் தொடங்குவதைத் தவிர்ப்பது நல்லது.
மிதுனம்

அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சியின் போது, மிதுன ராசியின் 5-ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இக்காலம் சற்று சவாலானதாக இருக்கும்.
நிதி ரீதியாக மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், செலவுகளைத் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும்.பணியிடத்தில் தவறான புரிதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
கன்னி

அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சியின் போது, கன்னி ராசியின் 2-ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
குறிப்பாக, நிதி நிலைமை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் வெற்றி பெற அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு, பதற்றத்தை அதிகரிக்கலாம்.அரசு வேலை தொடர்பான விஷயங்களில் மேலும் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
துலாம்

அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சியின் போது, துலாம் ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் தொழிலில் தடைகளை சந்திக்க நேரிடும்.
வேலையில் மன அழுத்தம் அதிகரிக்கலாம். தன்னம்பிக்கை குறையவும் வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறையலாம். செலவுகள் அதிகரிப்பதால் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். முக்கியமாக, இக்காலத்தில் நிதி தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
தனுசு

அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சியின் போது, தனுசு ராசியின் 11-ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சில சவால்களை எதிர்கொள்ள நேரிடும். ஆரோக்கியப் பிரச்சனைகளைப் புறக்கணிக்காமல் கவனம் செலுத்த வேண்டும்.
வேலையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இது மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். முதலீடுகள் அல்லது பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது அனுபவசாலிகளின் ஆலோசனையைப் பெற்று செயல்பட்டால் பாதுகாப்பாக இருக்கலாம்.
கும்பம்

அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சியின் போது, கும்ப ராசியின் 9-ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
தேவையற்ற செலவுகள் அதிகரிப்பதால் பணப் பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நீதிமன்ற வழக்குகள் தொடர்பான விஷயங்களில் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக, இக்காலத்தில் எந்தப் பிரச்சனையையும் பொறுமையாகக் கையாள வேண்டும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |