ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள்
இன்று சூரியன் பெயர்ச்சி அடைந்துள்ள நிலையில், இதனால் எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சூரியனின் பெயர்ச்சி
சூரியப் பெயர்ச்சியினை அடிப்படையாகக் கொண்டே தமிழ் மாதங்கள் பிறக்கின்றது. இன்று அதிகாலை 4.26 மணிக்கு கிரகங்களின் ராஜாவாகிய சூரியன் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார்.
இந்த ராசியின் அதிபதி குரு ஆவார். இந்த பெயர்ச்சியின் போது சில ராசிகள் நன்மைகளைப் பெறுவார்கள். இந்த பெயர்ச்சியானது 2026ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி வரை நீடிக்கின்றது.
அந்த வகையில் சூரியனின் வருகை எந்தெந்த ராசியினர் மிகவும் சாதகமான பலன்களைப் பெருவார்கள் என்பதை அறிந்து கொள்வோம்.

மேஷம்
சூரியன் மேஷ ராசியில் ஒன்பதாம் வீட்டில் பயணிப்பதால் இவை அதிர்ஷ்டத்தை அளிக்கின்றது. வெளிநாட்டு பயணம், உயர் கல்வி, புதின யாத்திரை என அனைத்தும் வெற்றியாகவே அமையும்.
ஆசிரியர் மற்றும் தந்தையிடமிருந்து சிறப்பு நன்மையினை பெறுவதுடன், நீதிமன்ற வழக்குகளிலும் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன், புதிய தொடக்கத்திற்கும் இந்த காலம் சிறந்ததாகவும், அதிர்ஷ்டத்தையும் அளிக்கின்றது.

ரிஷபம்
சூரியன் ரிஷப ராசியில் எட்டாவது வீட்டில் பயணிப்பதால், மர்மமான பலன்களை அளிப்பதுடன், பரம்பரை சொத்துக்களும் கிடைக்கும். நிலுவையில் நிதி, காப்பீடு, லாட்டரி இவற்றிலம் லாபமும் கிடைக்கும். நாள்பட்ட வியாதிலிருந்து மேம்படவும் செய்யலாம்.

கடகம்
சூரியன் கடக ராசியில் ஆறாவது வீட்டில் பயணிப்பதால் எதிரிகள் மற்றும் நோய்களுக்கு எதிராக வெற்றி கிடைக்கும். நாள்பட்ட வியாதியிலிருந்து விடுதலை, நீதிமன்ற வழக்கில் வெற்றி கிடைக்கும். இந்த நேரத்தில் எதிரிகள் பின்வாங்குவார்களாம்.

சிம்மம்
சூரியன் சிம்ம ராசியில் ஐந்தாம் வீட்டில் பயணம் செய்வதால் குழந்தைகளிடமிருந்து நல்ல செய்திகளைப் பெறலாம். காதல் வாழ்க்கையில் பாசம் இன்னும் அதிகரிக்கும். படிப்பில் வெற்றி கிடைப்பதுடன், குழந்தைகள் மகிழ்ச்சியாகவும், அறிவுசார் வெற்றியும் பெறுவதற்கு இது உகந்த காலமாகும்.

தனுசு
சூரியன் தனுசு ராசியில் பயணிப்பதால் ஆளுமை மேம்படுவதுடன், தன்னம்பிக்கை உச்சத்தில் இருக்குமாம். உங்களது பேச்சைக் கேட்டு மற்றவர்கள் நடப்பதுடன், வேலையில் பதவி உயர்வு மற்றும் பொறுப்புகளும் கிடைக்கும். நீங்கள் தலைமைத்துவ திறன்களை வளர்த்துக் கொள்ள சிறந்த நேரமாகும்.

மகரம்
சூரியன் மகர ராசியில் பன்னிரண்டாம் வீட்டில் பயணிப்பதால், வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைப்பதுடன், பயணமும் வெற்றியாகவே அமையும். ஆன்மீகம், தியானம் போன்றவற்றால் ஈர்க்கப்படுவதுடன், நிலுவையில் இருக்கும் பணிகளும் நிறைவடையுமாம்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |