புத்தாண்டில் ஏற்படும் சூர்ய பெயர்ச்சி! 4 ராசியினருக்கு கொட்டும் அதிர்ஷ்டம்
புத்தாண்டின் ஆரம்பத்தில் ஏற்படும் சூர்ய பெயர்ச்சியினால் அதிர்ஷ்டத்தை பெறும் ராசிகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சூரியப் பெயர்ச்சியினை அடிப்படையாகக் கொண்டே தமிழ் மாதங்கள் பிறக்கின்றது. இன்னும் சில தினங்களில் புத்தாண்டு பிறக்கும் நிலையில், ஜனவரி 14ம் தேதி சூரியன் மகர ராசிக்கு செல்கின்றார்.
அவ்வாறு மகர ராசிக்குள் வசிக்கும் சூரியனால் அதிர்ஷ்டத்தை சந்திக்கும் 4 ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மேஷம்
2026 முதல் சூரிய பெயர்ச்சியினால் மேஷ ராசியினரின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். தொழில் விடயங்களில் அதிக பலன்கள் கிடைப்பதுடன், இந்த காலத்தில் அரசு பணி மற்றும் உயர் பதவிகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.
தொழில் செய்துவருபவர்கள் நல்ல லாபத்தினை பெறுவதுடன், நிதி நிலைமையும் மேம்படுகின்றது. பழைய கடன்களை அடைக்கவும், வாழ்க்கையில் நிம்மதி ஏற்படவும் செய்யும்.

சிம்மம்
2026 புத்தாண்டில் நடக்கும் சூரிய பெயர்ச்சியினால், சிம்ம ராசியினருக்கு அனைத்து முயற்சிகளும் வெற்றியை கொடுக்கும். புதிய பதவிகளை பெறுவதுடன், பண வரவு அதிகமாக இருக்கும்.
பழைய முதலீடுகளில் நல்ல லாபமும், நிதி நிலையில் முன்னேற்றமும் காணப்படும். திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் அகன்று அமைதி, மகிழ்ச்சி நிலவும்.

விருச்சிகம்
ஜனவரி 14ல் நடக்கும் சூரிய பெயர்ச்சியினால் விருச்சிக ராசியினர் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் நிகழ்வதுடன், பணியிடத்தில் மரியாதையும் கிடைக்கும்.
கடின உழைப்பிற்கு நல்ல பலனும், பதவியில் உயர்வும் கிடைப்பதுடன், கடன் பிரச்சனைகள் தீரும். வணிக ஒப்பந்தத்தில் லாபத்தினை பெறலாம். புதிய தொழில் தொடங்குவதற்கு இந்த காலக்கட்டம் நல்ல பலனை அளிக்கும். நிலுவையில் இருக்கும் பணங்கள் நிச்சயம் உங்களைத் தேடி வருமாம்.

தனுசு
தனுசு ராசியினருக்கு இந்த சூரிய பெயர்ச்சி பொற்காலமாக அமைவதுடன், வாழ்க்கையில் பல அற்புதமான மாற்றங்களும் நிகழும். வேலை தேடுபவர்கள் நல்ல வேலையை பெறுவதுடன், புத்தாண்டில் இன்னும் பல நல்ல செய்திகள் கிடைக்குமாம்.
குடும்பத்தினரிடமிருந்து முழு ஆதரவும், குழந்தைகள் மூலம் நல்ல செய்தியினையும் பெற முடியும். சமூகத்தில் மரியாதையும் அதிகரிக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |