அனுஷ நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சாரம்: இந்த 4 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி!
ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்களின் அரசனாகக் கருதப்படும் சூரியன், சனி பகவானின் ஆதிக்கம் நிறைந்த அனுஷ நட்சத்திரத்தில் நுழைய உள்ளார்.
சூரியனின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சி ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதன்படி, 2026 நவம்பர் 20ஆம் தேதி முதல் டிசம்பர் 3ஆம் தேதி காலை வரை சூரியன் அனுஷ நட்சத்திரத்தில் சஞ்சரிக்க உள்ளார்.

சூரியனும் சனியும் தொடர்புடைய இந்த நட்சத்திர மாற்றத்தால், சில ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை, தலைமைத்துவத் திறன், தொழில் வளர்ச்சி மற்றும் சமூக அந்தஸ்து ஆகியவற்றில் சாதகமான மாற்றங்கள் ஏற்படப்போகின்றது. இதனால் வாழ்க்கையின் பல்வேறு துறைகளிலும் முன்னேற்றத்தையும் நல்ல மாற்றங்களையும் சந்திக்ப்போகின்றார்கள்.
அப்படி, சூரியனின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சியால் தொழில் மற்றும் நிதி நிலையில் உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

சூரியன் அனுஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது ரிஷப ராசியினருக்குச் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் மற்றும் முக்கியப் பணிகள் கிடைக்கலாம்.
இதன் மூலம் தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். வேலை நிமித்தமான பயணங்கள் லாபம் தரக்கூடும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகளைப் பெறலாம்.
இந்தச் சாதகமான காலத்தைப் பயன்படுத்தி இலக்குகளை அடைவதுடன், தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சியிலும் முன்னேறலாம்.
கன்னி

கன்னி ராசியினருக்கு சூரியனின் நட்சத்திர மாற்றம் சிறப்பான பலன்களைத் தரும். புதிய முதலீட்டு வாய்ப்புகள் கிடைப்பதுடன், நிதி முடிவுகள் மூலம் நல்ல லாபமும் கிடைக்கலாம்.
இருப்பினும், முதலீடு செய்வதற்கு முன் அதன் சாதக பாதகங்களை ஆராய்வது அவசியம். நீண்டகாலமாக நிலவி வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரலாம்.
அலுவலகத்தில் புதிய உயரங்களை அடைவதற்கும், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதற்கும் வாய்ப்புள்ளது. ஒப்பந்தங்கள் மூலம் பொருளாதார நிலை மேம்படும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கலாம்.
மகரம்

மகர ராசியினருக்கு இந்தச் சூரியப் பெயர்ச்சி லாபகரமான காலமாக அமையும். சமூகத்தில் அந்தஸ்தும் நற்பெயரும் அதிகரிக்கலாம். நீண்டகாலமாகத் தடைப்பட்ட பணிகள் மீண்டும் முன்னேற்றம் காணும்.
வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு மற்றும் தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். மூத்த அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும்.
குடும்பத்தினரின் ஒத்துழைப்பால் நினைத்த இலக்குகளை எளிதில் அடையலாம். இந்தக் காலகட்டத்தில் பொருளாதார நிலையும் வலுப்பெற வாய்ப்புள்ளது.
கும்பம்

கும்ப ராசியினரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம். நீண்டகாலமாக நிலவி வந்த பிரச்சினைகள் மற்றும் கருத்து வேறுபாடுகளுக்குத் தீர்வு கிடைக்கும்.
குடும்ப உறவுகள் மேம்படுவதுடன், பணியிடத்தில் உழைப்புக்கான அங்கீகாரமும் கிடைக்கலாம். வியாபாரிகளுக்குக் கடந்தகால முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
புதிய ஒப்பந்தங்களும் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கும் இந்தக் காலம் சாதகமாக அமையும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |