ஒரே ராசியில் 3 கிரகங்களின் அரிய சேர்க்கை: ராஜ வாழ்க்கை வாழப்போகும் ராசியினர் யாவர்?
ஜோதிட சாஸ்த்திரத்தின் அடிப்படையில் கிரகங்களின் நிலையை விடவும் கிரகங்களின் சேர்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. காரணம் கிரங்களின் இணைவால் அரிய ராஜ யோகங்கள் உருவாகின்றது.
இதனால் கிரக பெயர்ச்சிகளின் போது கிடைக்கும் பலன்களை விடவும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிகளவில் அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும் என ஜோதிட நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

அந்தவகையில் மார்ச் மாதத்தில் குரு பகவான் ஆளும் மீன ராசியில் சனி, சுக்கிரன் மற்றும் சூரியன் ஆகிய அதிசக்திவாய்ந்த கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகின்றது.
இதன் தாக்கமானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க சாதக, பாதக மாற்றங்களை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு தொழில், நிதி, கல்வி மற்றும் குடும்ப வாழ்க்கையில் அமோகமான அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப்போகின்றது. அவை எந்ததெந்த ராசிகள் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகுவதால், இவர்களின் தொழில் வாழ்க்கையில் நீண்ட எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
இவர்களின் நிதி நிலையில் அற்புதமான ஏற்றம் உண்டாகும். பல வழிகளிலும் வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் கூடிவரும்.
நீண்ட காலமாகவே நிலுவையில் இருந்த கடன் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டும் வாய்ப்புகள் தானாக அமையும். சுக்கிரன், சூரியன் ஆசி மற்றுமன்றி சனியும் லாப சனியாக இருப்பதால், இவர்களின் முன்னேற்றத்தை இந்த காலகட்டத்தில் யாராலும் தடுக்கவே முடியாது.
மீனம்

மீன ராசியின் முதல் வீட்டில் திரிகிரக யோகம் உருவாகுவதால் நிதி நிலையில் இதுவரை காலமும் இருந்துவந்த சிக்கல்களுக்கு விடிவு கிடைக்கும். கடன் பிரச்சினைகளை குறைந்த முயற்ச்சியிலேயே தீர்க்கும் வாய்ப்பு அமையும்.
தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.
சாதாரண வியாபாராத்தில் ஈடுபடுபவர்கள் முதல் ,தொழிலதிபர்கள் வரையில் இந்த யோகத்தால் பல்வேறு வகையிலும் சாதக பலன்களை பெறுவார்கள். எந்த முறையில் பணிபுரிந்தாலும் நிதி நிலை சிறப்பாக இருக்கும்.
தனுசு

தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகுவதால், இவர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களுக்கு மத்தியில் இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கும்.
புதிய முயற்சிகளில் குடும்பத்தினரின் முழுமையான ஆதரவும் ஆசீர்வாதமும் கிடைப்பதால், இந்த ராசியினரின் வாழ்க்கையில் இந்த காலகட்டம் அதிக வெற்றிகளை கொண்டுவரும்.
பரம்பரை சொத்துக்களால் லாபமடையும் பிராப்தம் காணப்படுகின்றது. மொத்தத்தில் தனுசு ராசியினருக்கு இந்த ராஜ யோகத்தால் வாழ்க்கையே மாறப்போகின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |