சூரியன்–சனி உருவாக்கும் சமசப்தம யோகம்: அடுத்த 30 நாட்கள் இந்த ராசிகள் ஜாக்கிரதை!
ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாகக் கருதப்படுபவர் சூரியன். அதேபோல் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். இவ்விரு கிரகங்களும் எதிரிகளாகக் கருதப்பட்டாலும், ஜோதிட நம்பிக்கையின்படி சூரியனும் சனியும் தந்தை-மகன் உறவைக் கொண்டவர்கள்.
சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுகிறார். அந்த வகையில், சூரியன் செப்டம்பர் 17ஆம் தேதி சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு செல்கிறார். தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருவதால், சூரியனுக்கும் சனிக்கும் இடையே சமசப்தம யோகம் உருவாகிறது.

அதாவது இரு கிரகங்களும் ஒன்றுக்கொன்று 7ஆம் வீட்டில் உள்ளன. இந்த யோகம் அக்டோபர் 17ஆம் தேதி வரை நீடிக்கும். இதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் அடுத்த 30 நாட்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும் என ஜோதிட கணிப்புகள் குறிப்பிடுகின்றது.
அப்படி சூரியன் மற்றும் சனியால் உருவாகும் சமசப்தம யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசியின் 6-ஆம் வீட்டில் சூரியனும், 12-ஆம் வீட்டில் சனியும் இருந்து சமசப்தம யோகத்தை உருவாக்கியுள்ளனர். இதனால் பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிப்பதுடன், சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
கூட்டு தொழில் செய்பவர்கள் பணப் பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் தலைவலி அல்லது செரிமானப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.குறிப்பாக நிதி விடயங்களில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
துலாம்

துலாம் ராசியின் 12-ஆம் வீட்டில் சூரியனும், 6-ஆம் வீட்டில் சனியும் இருந்து சமசப்தம யோகத்தை உருவாக்கியுள்ளனர். இதனால் கடின உழைப்புக்கான பலன் கிடைக்காமல் ஏமாற்றம் ஏற்படலாம்.எனவே அவசரப்படாமல் பொறுமையாக இருக்க வேண்டும்.
ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டினால் எதிர்பாராத மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். பண விஷயங்களிலும் கூடுதல் கவனம் தேவை.
மீனம்

மீன ராசியின் முதல் வீட்டில் சனியும், 7-ஆம் வீட்டில் சூரியனும் இருந்து சமசப்தம யோகத்தை உருவாக்கியுள்ளனர். இதனால் திருமண வாழ்க்கையில் பதற்றம் ஏற்படலாம். வாழ்க்கைத்துணையுடன் பேசும்போது பொறுமையாக இருந்து, தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது சிறப்பு.
இக்காலத்தில் முக்கியமான நிதி முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் கவனம் உங்கள் செயல்பாடுகளில் இருக்கும் என்பதால், பணிகளை கவனமாகச் செய்ய வேண்டும். அலட்சியம் இழப்பை ஏற்படுத்தலாம். சிலருக்கு மன அழுத்தமும் ஏற்படலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |