சிக்கலில் மாட்டிக்கொண்ட சிவகார்த்திகேயன் - 75 கோடி சம்பளத்தை வாரி வழங்கும் சன்பிக்சர்ஸ்!
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் விடா முயற்ச்சியையும், வெற்றியையும் சொல்லி தான் தெரியவேண்டியதில்லை..
கடின முயற்ச்சியால் தற்போது பெரிய பட்ஜெட் நடிகராகவே வலம் வருகிறார். இதையடுத்து இவர் நடிப்பில் வெளியான ரெமோ, வேலைக்காரன், சீமராஜா என அவர்கள் தயாரித்த மூன்று படமுமே பெரிய பட்ஜெட். இதில் வேலைக்காரனும், சீமராஜாவும் சுமாராகப் போக பல கோடிகள் கடன் ஏற்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயனுக்கு 5 படங்களில் நடிக்க 75 கோடிகள் சம்பளம் பேசியுள்ளது சன் பிக்சர்ஸ். இந்த ஐந்து படங்களை இரு வருடங்களில் எடுத்து முடிப்பதாக காலவரையறையும் நிர்ணயித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, பிற தயாரிப்பு நிறுவனங்களில் நடிக்க ஆரம்பித்தார் சிவகார்த்திகேயன். ஆர்.ரவிக்குமாரின் சயின்ஸ் பிக்ஷன் படம் தற்போது கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணை தயாரிப்பில் அயலான் என்ற பெயரில் உருவாகி வருகிறது.
ஆனால், கொரோனா ஊரடங்கால் சிவகார்த்திகேயன் திரைவாழ்க்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், அவரது டாக்டர் படத்தை டிஸ்னி + ஹாட் ஸ்டார் தங்கள் தளத்தில் வெளியிட தயாராக உள்ளது. நல்ல தொகைக்கு வாங்க விரும்புகின்றனர்.
ஆனால் அவர்கள் விதித்த ஒரே கண்டிஷன், படத்தின் சேட்டிலைட் உரிமையையும் தங்களுக்கே தர வேண்டும். ஆனால், சேட்டிலைட் உரிமை சன் பிக்சர்ஸிடம் உள்ளது.
இதனால் டாக்டர் இன்னும் ஓடிடியில் வெளியாகாமல் உள்ளது. இதனிடையே, தான் சன் பிக்சர்ஸ் இரண்டு வருடம், ஐந்து படங்கள் என்ற புதிய கணக்குடன் சிவகார்த்திகேயனை ஒப்பந்தம் செய்ய முன் வந்திருக்கிறது.
மேலும், ஐந்து படங்களுக்கும் சேர்த்து 75 கோடிகள் சம்பளம் பேசியுள்ளனர். கொரோனா பேரிடர் காலத்தில் சிவகார்த்திகேயனுக்கு இது நல் வாய்ப்பு. திரையரங்கு, ஓடிடி, சேட்டிலைட் என எல்லா தளங்களிலும் சன் பிக்சர்ஸ் படத்தை வெளியிடும் என்றவகையில் அவர்களுக்கும் நல்ல லாபம் தான்.
ஆனால், சிவகார்த்திகேயனை இயக்கப் போகும் அந்த ஐந்து இயக்குனர்கள் யார் என்பதுதான் ஒரு பெரிய கேள்வி....