தொட்டதெல்லாம் வெற்றி! சூரியப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!
Sun Transit on November 20: நவகிரகங்களில் சூரிய பகவான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகக் கருதப்படுகிறார். ஜோதிட சாஸ்திரத்தின்படி, சூரியனின் ஒவ்வொரு பெயர்ச்சியும் மனிதர்களின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது.
அந்த வகையில், 2026 நவம்பர் 20ஆம் தேதி அதிகாலை 03:03 மணிக்கு சூரிய பகவான் அனுஷம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார்.செவ்வாய் பகவானின் ஆதிக்கம் பெற்ற அனுஷம் நட்சத்திரம், தைரியம், ஆற்றல், விடாமுயற்சி மற்றும் இலக்குகளை அடைவதற்கான உறுதியைக் குறிக்கிறது.

இதனால் இந்தப் பெயர்ச்சி தொழில், பணியிடப் பொறுப்புகள், அதிகாரம் மற்றும் தனிப்பட்ட லட்சியங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகின்றது. ஜோதிடத்தில் சூரியன் தன்னம்பிக்கை, தலைமைத்துவம், அதிகாரம், சுயமரியாதைஆகியவற்றைக் குறிக்கிறார்.
எனவே, சூரியனின் இந்த நட்சத்திர மாற்றமானது அனைத்து ராசிக்காரர்களிடத்திலும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட சில ராசியினருக்கு கூடுதல் அதிர்ஷ்டத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கப்போகின்றது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு சூரியனின் இந்த நட்சத்திர மாற்றம் பல்வேறு நன்மைகளைத் தரப்போகிறது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகளை முடிக்கவும், பணியிடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் சாதகமான காலமாக அமையும்.
பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதுடன், பணியில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.வியாபாரிகள் தங்களின் கடின உழைப்பால் தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வார்கள்.
குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவதுடன், புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகளும் உருவாகும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர மாற்றம் அதிர்ஷ்டத்தையும் முன்னேற்றத்தையும் அளிக்கப்போகிறது. தன்னம்பிக்கை மற்றும் தலைமைத்துவத் திறன்கள் அதிகரிப்பதுடன், புதிய தொழில் வாய்ப்புகளும் கிடைக்கலாம்.புத்திசாலித்தனத்தால் பல்வேறு துறைகளில் வெற்றி பெறுவார்கள்.
வேலை தொடர்பான பயணங்கள் ஆதாயத்தைத் தரும். புதிய ஒப்பந்தங்கள் மூலம் லாபம் கிடைப்பதுடன், வியாபாரத்தை விரிவுபடுத்தவும் வாய்ப்புகள் அமையும்.துணையுடனான நீண்டகால கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சி உண்டாகும்.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சூரியனின் இந்த நட்சத்திர மாற்றம் சாதகமான திருப்பங்களை ஏற்படுத்தும். ஆளுமை, தன்னம்பிக்கை மற்றும் ஈர்ப்புத்திறன் அதிகரிப்பதுடன், தலைமைத்துவப் பண்புகளும் மேம்படும்.
வருமானம் உயர்வதற்கும், புதிய வருமான வழிகள் உருவாகுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. தொழில் வாழ்க்கையிலும் நல்ல மாற்றங்கள் ஏற்படலாம். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதுடன், போட்டித் தேர்வுகளிலும் வெற்றி கிடைக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்; நீண்டகாலப் பிரச்சினைகள் சுமுகமாகத் தீரும். பழைய முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கலாம். வியாபாரிகளுக்குப் புதிய லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |