3 கிரகங்களின் அரிய சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரப்படி, அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. அப்படி கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கம் செலுத்தும்.
நவகிரகங்களின் ராஜாவான சூரியனும், இளவரசரான புதனும் தற்போது கேது அமைந்துள்ள மகம் நட்சத்து நிலைகொண்டுள்ளனர்.

ஒரே நட்சத்திரத்தில் இந்த மூன்று கிரகங்களும் அமைந்திருப்பது தனித்துவமான யோகத்தை உருவாக்குகிறது. இது ஒவ்வொரு ராசிக்கும் வெவ்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.
சூரியன் அடுத்த நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சியாகும் 2026 ஆகஸ்ட் 31 வரை இந்த கிரகங்களின் சேர்க்கை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காலகட்டத்தில் மூன்று ராசிக்காரர்களுக்கு தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் சாதகமான பலன்கள் கிடைக்கலாம். அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை இந்தப் பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் சாதகமானதாக இருக்கும். நீண்ட காலமாகத் தேங்கியிருந்த வேலைகள் முன்னேற்றம் காணத் தொடங்கும்.குடும்பச் சூழல் மகிழ்ச்சியாக அமையும்.
புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பும் ஏற்படலாம். முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைப்பதுடன், புதிய தொழில் அல்லது முயற்சியைத் தொடங்கவும் இது ஏற்ற காலமாகும். வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும்.
திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகும். பொருளாதார நிலை மேம்படுவதுடன், குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தை அனுபவிக்க முடியும்.
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த அரிய கிரக சேர்க்கையால் தொழில் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். கடந்த கால முதலீடுகள் சாதகமான பலன்களைத் தரக்கூடும்.
மந்தமாக இருந்த வியாபாரமும் மீண்டும் முன்னேற்றப் பாதைக்குத் திரும்பலாம். நிதி முயற்சிகள் வெற்றி பெறுவதுடன், அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும்.
வீடு அல்லது வாகனம் வாங்க விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் அமையலாம். பணியில் இருப்பவர்கள் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடனான உறவை வலுப்படுத்தி, தொழில் முன்னேற்றம் ஏற்படும்.
மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் முதலீடுகள் மற்றும் தொழில் முயற்சிகள் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்ககும்.
புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். நிதி நிலை மேம்படுவதுடன், வருமானத்தை அதிகரிக்க புதிய வழிகளும் கிடைக்கலாம். கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைப்பதோடு, முக்கியப் பொறுப்பும் ஒப்படைக்கப்படலாம்.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணியும் நிறைவடையக்கூடும். குடும்பத்தினருடன் தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். கடந்த கால பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |