18 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியன்- கேது அரிய சேர்க்கை: அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!
வேத ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படுபவர் சூரியன். இவர் மாதம் ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவார்.
சூரியனின் இந்த ராசி மாற்றம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பல்வேறு வகையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது. தற்போது கடக ராசியில் பயணித்து வரும் சூரியன், ஆகஸ்ட் 17ஆம் தேதி தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார்.

சிம்மத்தில் ஏற்கனவே கேது பயணித்து வரும் நிலையில், சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியன்–கேது சேர்க்கை உருவாகிறது.
இந்த முக்கிய கிரகச் சேர்க்கை அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பாக 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், வெற்றி, கௌரவம் மற்றும் எதிர்பார்த்த நல்ல பலன்களை வழங்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அப்படி அதிக சாதக நன்மைகளை அனபவிக்கப்போகும் ராசிகள் குறித்து பார்க்கலாம்.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு முதல் வீட்டில் கேது - சூரியன் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த கிரகச் சேர்க்கை பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.
குறிப்பாக, தன்னம்பிக்கை அதிகரித்து, சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக நிறைவடையும். அதிர்ஷ்டம் பல விஷயங்களில் உங்களுக்கு துணையாக இருக்கும். நிதி நிலையில் ஏற்றம் உண்டாகும்.
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு 12-ஆம் வீட்டில் கேது - சூரியன் சேர்க்கை நிகழவுள்ளது. இதன் தாக்கத்தால் புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பணியிடத்தில் நீங்கள் செய்த கடின உழைப்புக்கு உரிய அங்கீகாரமும் பலனும் கிடைக்கும். இதனால் தன்னம்பிக்கை அதிகரித்து, நிதி நிலையும் மேம்படும்.
பொருளாதார ரீதியாக நல்ல ஆதாயங்கள் கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகளும் முன்னேற்றமும் ஏற்படலாம். வியாபாரிகள் லாபம் காணும் சூழல் உருவாகும்.
மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு 8-ஆம் வீட்டில் கேது - சூரியன் சேர்க்கை நடைபெற உள்ளது. இதன் காரணமாக ஆகஸ்ட் 17 முதல் அதிர்ஷ்டம் சாதகமாக அமையும்.
நீங்கள் மேற்கொள்ளும் பணிகளில் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு, வளர்ச்சிக்கான புதிய பாதைகள் திறக்கப்படலாம்.
நீண்ட காலமாக முடிவடையாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக நிறைவடையும்.நிதி நிலை மேம்பட்டு, வருமானமும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |