சூரியன் - குரு சேர்க்கை: ஜூன் மாதம் முதல் இந்த ராசிகளுக்கு சொகுசு வாழ்க்கை உறுதி!
ஜோதிட ரீதியில் நவகிரகங்களின் நிலையானது ராசி பலன் கணிப்பில் முக்கிய இடம் வகிக்கின்றது.கிரகங்களின் ராசி நட்சத்திர பெயர்ச்சி மற்றும் கிரக சேர்க்கையால் உருவாகும் அரிய யோகங்கள் என்பன அனைத்து ராசியினரின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்தவகையில், அனைத்து கிரகங்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சூரிய பகவான், ராஜ குருவாக அறியப்படும் குரு பகவான் ஆகிய முக்கிய கிரகங்களின் சேர்க்கை, ஜூன் 19 ஆம் திகதி நடக்கிறது.

இதனால் துவித்வாதச யோகம் உருவாகின்றது. இந்த யோகமானது அனைத்து ராசிக்காரர்களும் குறிப்பிடத்தக்க சாதக பாதக பலன்களை அடைந்தாலும், குறிப்பிட்ட சில ராசியினர் தொழில் மற்றும் நிதி ரீதியில் உச்சகட்ட பலன்களை பெறப்போகின்றார்கள்.
சிம்மம்

சூரியன் மற்றும் குரு உருவாக்கும் துவித்வாதச யோகம் சிம்ம ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கையில் அமோக முன்னேற்றத்தை கொடுக்கப்போகின்றது.
இந்த காலகட்டத்தில் தொட்டதெல்லாம் வெற்றியாகும். நீண்ட நாட்களாக முடங்கி கிடைந்த பணம் கைக்கு வந்து சேரும். புதிய வருமானத்துக்கான வழிகள் திறக்கும்.
நிதி சார்ந்த பிரச்சனைகள் நீங்கும். வெளிநாட்டு உறவுகளால் பெரிய தொகை நிதியுதவி கிடைக்க வாய்ப்புள்ளது.
துலாம்

சூரியன் மற்றும் குரு உருவாக்கும் துவித்வாதச யோகம் துலாம் ராசிக்காரர்களுக்கு பல வகையிலும் சாதக மாற்றங்களை ஏற்படுத்தும்.
பணியிடத்தில் சக ஊழியர்களின் முழு ஆதரவு கிடைக்கும். அனைவருடனும் இணக்கமாக செயல்பட்டு, நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவீர்கள்.
வருமானம் உயர்வதற்கான புதிய வழிகள் தானகவே அமையும். வேலை மாற நினைத்தவர்களுக்கு மனதுக்கு பிடித்த தொழில் அமையும்.
தனுசு

சூரியன் மற்றும் குருவின் துவித்வாதச யோகத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். திடீர் பண வரவால் மகிழ்ச்சி உண்டாகும்.
சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சமுதாயத்தில் உங்களுக்கான அங்கீகாரமும் மதிப்பும் தானகவே உயரும். நிதி நிலையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு ஏற்றம் உண்டாகும்.
போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். திருமண வாழ்க்கையில் இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |