ராகுவின் நட்சத்திரத்தில் சூரிய பெயர்ச்சி... அதிர்ஷ்டத்தினை பெறும் 5 ராசிகள்
சூரிய நட்சத்திர பெயர்ச்சியினால் அதிர்ஷ்டம் பெறும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சூரிய நட்சத்திர பெயர்ச்சி
ஜோதிடத்தில் கிரகம் மற்றும் நட்சத்தித்தின் மாற்றம் மிக முக்கியமாக பார்க்கப்படுகின்றது. நவகிரகங்களின் தலைவனும் ஆன்ம காரகனுமான சூரியன், ராகுவின் நட்சத்த்திரமான திருவாதிரைக்கு ஜுன் 22ம் தேதி செல்கின்றார்.
ராகுவின் நட்சத்திரமான திருவாதிரைக்கு செல்லும் போது, சில ராசியினருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் மற்றும் தொட்டதெல்லாம் துலங்கும் யோகமும் உண்டாகின்றது. அவை எந்தெந்த ராசியினர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசியினருக்கு சூரிய பகவானின் இந்த நட்சத்திர பெயர்ச்சியினால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்குமாம். பணியிடத்தில் உங்களது திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
பணியிடத்தில் புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வருவதுடன், நீண்ட நாள் வராம் இருந்த கடன் தொகை வந்து சேரும். சகோதர வழியில் ஆதரவு பெறுகுவதுடன், புதிய முயற்சி அனைத்திலும் வெற்றி கிடைக்குமாம்.

மிதுனம்
மிதுன ராசியினருக்கு இந்த நட்சத்திர பெயர்ச்சியினால், மிகச்சிறந்த காலகட்டமாக அமையுமாம். சமூகத்திலும், குடும்பத்திலும் மதிப்பு அதிகரிப்பதுடன், புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும்.
தொழில் ரீதியான பயணங்கள் பெரிய லாபத்தினை தருவதுடன், ராகுவின் நட்சத்திரம் என்பதால், கோபத்தினைக் குறைத்து நிதானமாக பேசினால் உறவுகளை பலப்படுத்துமாம்.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதியாக இருக்கும் சூரியன் இந்த நட்சத்திர பெயர்ச்சியினால் இருந்த முட்டுக்கட்டைகளை விலகி அபரிமிதமான லாபம் கிடைக்குமாம்.
வியபாரத்தில் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் இருப்பதுடன், மூத்த சகோதரர்களின் உதவியும் கிடைக்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேறுவதுடன், தொட்டதெல்லாம் பொன்னாகும் காலமாக அமையுமாம். திடீர் பணவரவு கிடைக்குமாம்.

கன்னி
கன்னி ராசியினருக்கு இந்த காலக்கட்ட லாபத்தை தருவதுடன், வேலை தேடுபவர்களுக்கு பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்களுக்கும் நல்ல செய்தி வந்தடையும்.
அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சுப செய்தி கிடைப்பதுடன், தனியார் துறையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்குமாம். மேலதிகாரிகளிடம் முழு ஆதரவை பெறுவதுடன், அரசியலில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்பும் கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசியினருக்கு சூரிய பெயர்ச்சியினால், தொழில் பலமடைவதுடன், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தடைபட்ட சுபகாரியங்கள் அனைத்தும் கைகூடும்.
கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிப்பதுடன், குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்வுகள் நடைபெறும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |