சூரியன் சனி சேர்க்கை... எந்த 4 ராசிக்கு பொற்காலம்னு தெரியுமா?
சூரியன் மற்றும் சனி சேர்க்கையினால் எந்தெந்த ராசியினர் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் ஏற்படப்போகின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சனி, சூரியன் சேர்க்கை
சூரியன் மற்றும் சனி இவற்றின் சேர்க்கையினால் த்வித்வாதச யோகம் உருவாகும் நிலையில், இதனால் சில ராசியினருக்கு பொன்னான காலமாகவும் இருக்கின்றது.
பிப்ரவரி மாதம் 19ம் தேதி 30 டிகிரி இடைவெளியில் இந்த சேர்க்கை நடைபெறுகின்றது. இந்த சக்தி வாய்ந்த யோகத்தினால் குறிப்பிட்ட சில ராசியினருக்கு செல்வம், வெற்றி, ஆரோக்கியம் ஏற்படுகின்றது. எந்தெந்த ராசிகள் என தற்போது பார்க்கலாம்.

ரிஷபம்
சூரியன் மற்றும் சனியின் சேர்க்கையினால் உருவாகும் த்வித்வாதச யோகத்தினால் ரிஷப ராசியினருக்கு நல்ல பலன் கிடைப்பதுடன், வருமானத்தில் முன்னேற்றம், முதலீட்டில் லாபமும் கிடைக்கும்.
மேலும் வெளிநாடு செல்லும் வாய்ப்பு மற்றும் செய்யும் அனைத்து காரியத்திலும் வெற்றியாக முடியும்.

கன்னி
த்வித்வாதச யோகத்தினால் கன்னி ராசியினருக்கு இந்த காலம் சாதகமாக அமையுமாம். வருமானம் அதிகரிக்க புதிய வழியினை கண்டுபிடிப்பதுடன், சமூகத்தில் மரியாதையும் அதிகரிக்கும்.
வேலை செய்யும் இடங்களில் புதிய பொறுப்புகளை பெறுவதுடன், இந்த காலத்தில் செலவுகள் குறைந்து அதிகமாக சேமிக்கவும் செய்வீர்கள்.

துலாம்
சூரியன் மற்றும் சனியின் சேர்க்கையானது துலாம் ராசியினருக்கு வெற்றினை அளிக்கின்றது. மேலும் இத்தருணத்தில் எடுக்கும் அனைத்து காரியங்களும் வெற்றியாகவே முடிகின்றது.
அரசு தொடர்பான ஒப்பந்தம் கைக்கு வருவதுடன், வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டிற்கு செல்லவும் வாய்ப்புள்ளது.

தனுசு
தனுசு ராசியினருக்கு த்வித்வாதச யோகத்தினால் அதிர்ஷ்டம் மட்டுமின்றி நிதிலையும் மேம்படுகின்றது. வேலை செய்யும் இடங்களில் மேலதிகாரிகளின் ஆதாரவும் கிடைக்கின்றது.
மேலும் பெற்றோர்கள் வழியில் இருந்து சொத்துக்கள் கைக்கு வருவதுடன், உங்களது ஆளுமை திறனும் அதிகரிக்கின்றது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |