வெயில் காலத்தில் கஸ்தூரி மஞ்சளுடன் இதை கலந்து பூசினால் போதும்: முகம் சிவப்பழகு பெறும்
வெயில் காலத்தில் நாம் நமது முகத்தை அழகாக மாற்ற கஸ்தூரி மஞ்சள் கொண்டு ஃபேஸ்பேக் தயாரிக்கும் முறையை இந்த பதிவில் பார்க்கலாம்.
கஸ்தூரி மஞ்சள் ஃபேஸ்பேக்
சருமப்பராமரிப்பிற்காக தற்போது பலரும் பலவாறு சிந்திக்கின்றனர். இதற்கு சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வதுடன், நம் சருமத்தை வெளிப்புறமாகவும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் பார்ப்பவர்களை ஈர்க்க செய்யும் சரும அழகு கிடைககும். இதற்காக சிலர் அடிக்கடி பியூட்டி பார்லருக்கு செல்ல வேண்டிய அவசியமும் இல்லை.
மேலும், ஃபேஸ் க்ரீம், சீரம் மற்றும் டோனர் போன்ற பொருட்களை முகத்திற்கு பயன்படுத்துகின்றனர். இதை வாங்க முடியாத பட்சத்தில் இயற்கை அழகை பராமரிக்க வீட்டில் காணப்படும் பொருட்களும் உள்ளன.
சந்தைகளில் காணப்படும் அழகுசாதனப்பொருட்கள் நமது உடலில் பல பிரச்சனைகளை கொண்டு வரும். இதுவே இயற்கையில் காணப்படும் பொருட்கள் நமது சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
அந்த வகையில் இயற்கையான முறையில் அதிக செலவு இல்லாமல் சருமத்தை பராமரிக்க கஸ்தூரி மஞ்சள் இருந்தால் போதும். இதை சில பொருட்களுடன் சேர்த்து தடவும் போது அது நல்ல பலனை தரும்.
இதற்காக, இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் முல்தானி மெட்டி பொடி, அரை டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள், துளசி பொடி, மூன்று டீஸ்பூன் தேன் மற்றும் தயிர் ஆகிய அனைத்து பொருட்களையும் சேர்த்து பசை பதத்திற்கு கலக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் நம் முகத்திற்கு தேவையான ஃபேஸ்பேக் தயாராகி விடும். இதை முகத்தில் தடவி விட்டு சுமார் 20 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும்.
இந்த ஃபேஸ்பேக்கை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது நம் முகம் பார்ப்பதற்கு பொலிவாக மாறி விடும். இது அனைவரின் சருமத்திற்கும் ஏற்றது.
இது போன்று, வீட்டிலேயே ஃபேஸ்பேக் தயாரித்து பயன்படுத்துவதால் ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்பும் கிடையாது. இந்த அழகுக்குறிப்பை வீட்டில் நீங்கள் மூன்று அல்லது நான்கு முறை கட்டாயம் பயன்படுத்தினால் நல்ல பெறுபேறு கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |