வெயில் தாங்க முடியாமல் தலைவலி வருதா? உடனே இதை செய்யுங்கள்
வெயில் காலத்தில் ஏற்படும் தலைவலியை எளிய வீட்டு வைத்தியத்தினால் எவ்வாறு சரிசெய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
இன்று பலரது பொதுவான பிரச்சினையாக இருப்பது தலைவலி ஆகும். மனச்சோர்வு, உடல்சோர்வு, உணவு பழக்கம் போன்ற பலவித காரணங்களால் தலைவலி ஏற்படுகிறது.
டென்ஷனால் கூட தலைவலி ஏற்படும். இந்நிலையில், தலைவலிக்கு உடனே மாத்திரை வாங்கி போடாமல் வீட்டு வைத்தியத்தால் எவ்வாறு சரிசெய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தலைவலி வருவதற்கான காரணம்
உடலில் ரத்தத்தில் சிவப்பணு குறைவாக இருந்தால் காலையில் எழுந்ததும் தலைவலியை உணரலாம். உடம்பில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருந்தாலும் தலைவலி, சோர்வு மற்றும் தலைசுற்றல் ஏற்படும்.
காலை எழுந்ததும் தலைவலி வருவதற்கு தண்ணீர் பற்றாக்குறையும் காரணமாக இருக்கின்றது. போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் இந்த பிரச்சினை ஏற்படும்.
மனஅழுத்தம் காரணமாகவும் தலைவலி ஏற்படும். இரவில் சரியான தூக்கம் இல்லையென்றாலும் தலைவலி ஏற்படும்.
உடம்பில் சர்க்கரை அளவு அசாதாரணமாக இருந்தாலும் தலைவலி இருக்கும். தினமும் காலை எழுந்ததும் தலைவலி இருந்தால் உடனே சர்க்கரை அளவை சரிபார்க்க வேண்டும்.
வீட்டு வைத்தியம் என்ன?
பட்டையை சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து, அதனை நெற்றியில் பற்றுப்போல தடவினால் தலைவலி சரியாகும்.
சுடுநீரில் சிறிது நேரம் கால்களை வைத்திருந்தால் தலைவலி தீர்வாகும்.
இஞ்சி தலைவலியை குணமாக்கும் நிலையில், சுக்கு பொடியை நெற்றியில் பற்று போட்டால் தலைவலி குணமாகும்.
புதினா எண்ணெய்யை நெற்றி மற்றும் தலையில் நன்றாக தேய்த்தால் தலைவலி சிறந்த தீர்வு அளிக்கும்.
தண்ணீர் சத்து இல்லையென்றாலும் தலைவலி ஏற்படும். ஆதலால் சரியான அளவில் தண்ணீர் அருந்தினால் தலைவலி குணமாகும்.
சுடு நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும்.
சிறிது இஞ்சி, சீரகம், தனியா ஆகியவற்றை சிறிது தண்ணீரில் போட்டு, 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி அருந்த தலைவலியில் இருந்து விடுபடலாம்.
கழுத்து, தலை பகுதியில் வெந்நீர் பையை வைத்து ஒத்தடம் கொடுத்தால் தலைவலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
தலைவலியில் இருந்து விடுபட ரோஸ்மேரி எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் உடனே நிவாரணம் கிடைக்கும்.
3 சொட்டு மிளகுக்கீரை எண்ணெயுடன் ஒரு சொட்டு பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்து நெற்றி மற்றும் கழுத்து பகுதியில் மசாஜ் செய்தால் தலைவலி படிப்படியாக குறையும்.