கோடைகாலத்தில் வெறும் வயிற்றில் உப்புக்கடலை பானம்! நிச்சயம் அதிசயத்தை உணர்வீர்கள்
கோடை காலம் ஆரம்பித்து விட்ட நிலையில், வறுத்த உப்புகடலையில் செய்யப்படும் பானத்தை காலை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் நன்மைகளை குறித்து இங்கு காணலாம்.
கோடை காலத்தில் உப்புக்கடலை
உப்பு கடலையை மாவாக அரைத்து தயார் செய்யப்படும் பானம் கோடைக்காலத்தின் சஞ்சீவி என்று அழைக்கப்படுகின்றது.
காலை வெறும் வயிற்றில் இதனைக் குடித்தால் செரிமான குழாய்களை சுத்தம் செய்து குடலில் உள்ள கொழுப்புகளை நீக்குகின்றது.
மேலும் மெட்டபாலிசத்தை அதிகரிப்பதுடன், வயிற்றை சுத்தப்படுத்தவும், மூல வியாதியைக் கட்டுப்படுத்தவும் செய்கின்றது.
இந்த பானத்தால் உடம்பில் ஈரப்பதம் தங்கியிருப்பதுடன், உடம்பில் நீர் பற்றாக்குறையை நீக்கி, நீரேற்றமாக வைத்திருக்க உதவுகின்றது.
சருமத்தை ஆரோக்கியமாகவும், இரத்த அழுத்தத்தினை சீராக பராமரிக்கவும் உதவி செய்கின்றது.
பானம் செய்வது எப்படி?
வறுத்த உப்பு கடலையை பொடித்து வைத்து டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தினமும் 2 ஸ்பூன் பொடியை நீரில் கலந்து அதனுடன் கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்து கொள்ளுங்கள்.
பின்பு கொஞ்சமாக எலுமிச்சை சாறு அதனுடன் சேர்க்கவும். தற்போது ஆரோக்கியமான உப்புக்கடலை பானம் தயார்.