குளிர்ச்சியான மண்பானை தண்ணீர்! இதுல இவ்வளவு நன்மை இருக்கின்றதா?
பழைய காலத்தில் வீடுகளில் மண் பானைகளும் அவற்றில் ஊற்றி வைத்து பயன்படுத்தும் தண்ணீரை தான் பெரும்பாலான மக்கள் குடித்து வந்தனர்.
ஆனால் தற்போது கோடை காலம் நெருங்கிவிட்டாலே மண்பானைகளுக்கு பதிலாக ஃப்ரிட்ஜ் தண்ணீரை தான் அதிகமாக விரும்பி குடிக்கின்றனர்.
இவர் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பருகும் தண்ணீர் உடலுக்கு பல கெடுதல்களை ஏற்படுத்துகின்றது. ஆனால் மண் பானையில் வைத்து பருகும் தண்ணீர், பல ஆரோக்கியத்தினை அளிக்கின்றது.
நமது உடலின் பெரும்பகுதி தண்ணீரே இருக்கின்றது. இதனால் பருவத்தைப் பொருட்படுத்தாமல் ஒரு நாளைக்கு 10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
மண் பானை தண்ணீரின் நன்மைகள்
மண் பானையில் தண்ணீர் ஊற்றி குடித்து வந்தால், இயற்கையாகவே குளிர்ச்சியை பெறலாம். ஏனெனில் மண்பானையில் உள்ள சிறிய துளைகள் நீரை விரைவாக ஆவியாக்குவதால், வெப்பத்தை இழந்து தண்ணீர் குளிர்ச்சி அடைகின்றது.
குளிர்சாதனப் பெட்டி தண்ணீரை பருகில் அரிப்பு, தொண்டை வலி, தொண்டையில் சதை வளர்தல் ஏற்படும். ஆனால் மண்பானை தண்ணீரை பருகினால் இவ்வாறான எந்த பிரச்சினையும் நம்மை நெருங்காது.
மண் பானை தண்ணீரில் எந்தவொரு ரசாயணமும் இல்லை என்பதால், செரிமானத்திற்கு உதவியாக இருக்கின்றது.
களிமண் கார கலவை பொருத்தமான pH சமநிலையை பராமரிப்பதால், இதில் அமிலத்தன்மை, மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினையை அறவே குறைக்கின்றது.