கோடை வெயிலுக்கு கருப்பு குடை பயன்படுத்துறீங்களா? இனி அந்த தவறை செய்யாதீங்க
கோடை வெயிலுக்கு எந்த மாதிரியான குடைகள் பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால், மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்வதற்கு குடையை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு பயன்படுத்தும் குடைகளில் கருப்பு நிற குடை நல்லதா? இல்லையா? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கருப்பு குடை
கோடை காலத்தில் கருப்பு நிற குடையை பயன்படுத்தினால் ஓரளவிற்கு மட்டுமே சூரியனின் நேரடி வெப்பத்தை தடுக்கும் என்றும் உடம்பிற்கு மறைமுகமாக கெடுதியை உண்டாக்கும் என்றும் கூறப்படுகின்றது.
சூரியனிடமிருந்து வரும் ஒளிக் கதிர்களை கருப்பு நிற குடைகள் உள்வாங்கி அதை தங்க வைத்துக் கொண்டு, வெப்பம் கதிர் வீசல் முறையில் குடையின் கீழ் இருப்பவரை கடுமையாகத் தாக்குகிறது.
இந்த காரணத்திற்காக தான் வெயிலில் கருப்பு நிற குடையை பயன்படுத்துபவருக்கு வியர்வை அதிகமாக வருவதை காணலாம்.
அதுமட்டுமின்றி, உடலில் கோடை வெப்பத்தால் கட்டிகள், சரும பதிப்புகள் என போன்ற பிரச்னைகள் வர வாய்ப்பு அதிகம் உண்டு.
எந்த நிற குடை நல்லது?
வெள்ளை நிற குடை தன் மீது படும் வெப்ப சூரிய ஒளிக் கதிர்களை தன்னிடம் வைக்காமல் அதை மீண்டும் மேல் நோக்கி திருப்பி அனுப்பி விடும்.
எனவே தான், கோடை வெயில் காலத்தில் வெப்பத்திலிருந்து உங்களை தற்காத்துக்கொள்ள கருப்பு நிற குடைகளை விட, வெள்ளை அல்லது பிற நிற குடைகளை பயன்படுத்துங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |